2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

அனில் ஜயசிங்க தலைமையிலான குழு விஜயம்

R.Tharaniya   / 2025 மார்ச் 10 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜயசிங்க தலைமையில் உயர் மட்டக் குழு ஞாயிற்றுக்கிழமை  (09) விஜயம் செய்து வைத்தியசாலையின் தேவைகளை குறித்து கேட்டறிந்து கொண்டது.

விடுதிகளிலுள்ள நோயாளிகளை பார்வையிட்டதுடன் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டணம் செலுத்தும் விடுதிகள், அவசர சிகிச்சைப்பிரிவு போன்றவற்றையும்  பார்வையிட்டனர்.

தரம் ஏ ஆதார வைத்தியசாலைக்கு ஆளணிகளுக்குரிய அனுமதி வழங்கி வைத்தியசாலையில் நீண்ட காலமாக நிலவும் மருந்தாளர், சிற்றூழியர், கதிரியக்கவியல் நிபுணர், சத்திர சிகிச்சை நிபுணர்  போன்ற ஆளணியினை நிரப்புமாறு வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவினால் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

அறுகம்பே சுற்றுலா பிரதேசத்தில் ஆதார வைத்தியசாலையுடன்  இணைந்தாக சுற்றுலா  ஆயுர்வேத மருத்துவ வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சின் கீழ்  கொண்டு வரப்பட்டுள்ள பொத்துவில் ஆதார வைத்தியசாலையை வந்து விசேட பராமரிப்பு வசதிகளுடன் ஒருங்கிணைந்த சுகாதார வைத்தியசாலையாக மாற்றியமைத்து சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணம் செலுத்தும் விடுதிகள்,அந்திமல்லி நிவாரண சிகிச்சை முதுமைப் பராமரிப்பு சேவைகள் மற்றும் மருத்துவச் சுற்றுலாத்துறைக்கான ஆயுர்வேத சிகிச்சை வசதிகள் ஆகியவற்றைக் கொண்ட ஒருங்கிணைந்த சுகாதார சேவைக்கான ஆதார வைத்தியசாலையாக முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X