2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

'றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி' நூல் அறிமுக நிகழ்வு கொழும்பில்

Super User   / 2013 மார்ச் 14 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

'றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி' எனும் தலைப்பிலான நூல் மற்றும் இறுவெட்டு அறிமுக நிகழ்வு கொழும்பில் நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டிலான இந்நிகழ்வு எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு கொழும்பு – 10 டி.ஆர். விஜயவர்த்தன மாவத்தையிலுள்ள முஸ்லிம் பெண்கள் கல்வி வட்டத்தில் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பேருவளை ஜாமியா நளீமியா கலாபீட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் (நளீமி) சிறப்புரையாற்றவுள்ளார்.

இந்த நூல் அறிமுகத்தினை சட்டத்தரணி எஸ்.என்.எம்.மர்சூம் மௌலான மேற்கொள்ளவுள்ளதுடன் முதற்பிரதி புரவலர் ஹாஷிம் உமருக்கு வழங்கப்படவுள்ளது. இந்த வெளியீடுகளின் மூலம் கிடைக்கும் நிதி றிஸானா நபீக்கின் குடும்பத்திற்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காத்தான்குடி மீடியா போரத்தினால் வெளிடப்பட்ட இந்த நூலின் வெளியீட்டு விழா கடந்த மார்ச் 1ஆம் திகதி காத்தான்குடியில் இடம்பெற்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X