2024 நவம்பர் 02, சனிக்கிழமை

"பிரபந்தப் பெருந்திரட்டு - தேவபாகமும் மானுடபாகமும்" நூல் வெளியீடு

Super User   / 2014 ஜனவரி 06 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன், எஸ்.குகன்


 சிவசம்புப் புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு – தேவபாகமும் மானுடபாகமும்" என்ற நூல் வெளியீடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புலவர்மணி கா.நீலகண்டனினால் எழுதப்பட்ட இந்த நூல் வெளியீட்டு விழா வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் ந.அனந்தராஜ் தலைமையில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் பேராசிரியர் அ.துரைராஜா மண்டபத்தில் நடைபெற்றது.

நூலின் முதற் பிரதி நூல் பதிப்பாசிரியர்களில் ஒருவரும் சிவசம்பு புலவரின் பேரனுமாகிய புலவர்மணி கா.நீலகண்டன் வழங்க வைத்திய கலாநிதி ந.குகதாசன் பெற்றுக்கொண்டார். சிறப்புப் பிரதியை யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் சி. சிறிசற்குணராசா பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் இறைவணக்கத்தினை யாழ். பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர் ந.சஞ்ஜீவனும் வரவேற்புரையினை பொறியியலாளர் நீலகண்டன் நித்தியானந்தனும் ஆசியுரையை கந்தவனம் தேவஸ்தான பிரதமகுரு சிவப்பிரம்ம ஸ்ரீ  ச.வைத்தியநாத குருக்களும் நிகழ்த்தினார்கள்.

அத்துடன், வாழ்த்துரைகளை யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் கி.விசாகரூபன், உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி அதிபர் சு.கிருஸ்ணகுமார் ஆகியோரும் நூல் வெளியீட்டுரையை ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி இராஜேஸ்வரி தில்லையம்பலமும் அறிமுகவுரையை பேராதனை பல்கலைக்கழக முன்னாள் சிரேஷ;ட விரிவுரையாளர் பூ.சோதிநாதனும் நூல் நயப்புரையை யாழ்.பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் எஸ். சிவலிங்கராஜாவும் ஆய்வுரையை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் வ.மகேஸ்வரனும் நூல் ஏற்புரையை பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளரும் நூல் பதிப்பாசிரியர்களில் ஒருவருமாகிய செல்லத்துரை சுதர்சன் ஆகியோர் நிகழ்த்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .