2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

3.5 மில்லியன் செலவில் பாலர் பாடசாலை திறப்பு விழா

Kanagaraj   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}



-தேவ அச்சுதன்.
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையில் 3.5 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட மாதிரிப்பாலர் பாடசாலைக் கட்டடம் செவ்வாய்க்கிழமை(1) திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் தவிசாளர் பொன் செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜித்,  கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சி.சந்திரகாந்தன், உள்ளூராட்சி, கிராமிய அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அஸீஸ், பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகான பாலர் பாடசாலைக் கல்விப் பணியகத்தின் பேரில் பிளான் சிறிலங்கா நிறுவனத்தினால் இவ் மாதிரிப் பாலர் பாடசாலைக் கட்டடம், அதற்கான தளபாடங்கள், அடிப்படை வசதிகள் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மரநடுகை மற்றும் பாடசாலையின் ஆவண கையளிப்பும் இடம்பெற்றது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X