2025 ஜனவரி 06, திங்கட்கிழமை

கர்நாடக இசைக் கல்வி நூல் வெளியீட்டு விழா

George   / 2015 ஜூலை 03 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைக்கழக இசைத்துறை தலைவர் கலாநிதி தர்ஷனனின்  'நவீன உளவியல் மூலம் கர்நாடக இசைக்கல்வி' நூல் வெளியீட்டு விழா நுண்கலைக்கழக இசைத்துறைக் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (02) நடைபெற்றது.

இந்நூலினை யாழ். இந்தியத் துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் ஏ.நடராஜன் வெளியிட்டு வைக்க, யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதி முதுநிலைப் பேராசிரியர் நா.ஞானகுமாரன் பெற்றுக் கொண்டார்.

நிகழ்வின் தலைமையுரையை யாழ். இலக்கியக் குவியத் தலைவர் வேலணையூர் தாஸ் நிகழ்தியிருந்தார்.

மதிப்பீட்டுரையை நூல் ஆசிரியரின் குரு சிற்றம்பலம் சிவஞானராஜா வழங்கியிருந்தார்.

முன்னாள் இசைத்துறைத் தலைவர் கலாநிதி ந.வி.மு.நவரெத்தினம், தர்மபூபதி சிதம்பரநாதன், நடனத்துறைத் தலைவர் திருமதி அருட்செல்வி கிருபைராஜா, சித்திரமும் வடிவமைப்பும் இணைப்பாளர் சி.சூரியகுமார் ஆகியோர் கலந்துகொண்டார்கள். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X