2025 ஜனவரி 06, திங்கட்கிழமை

கலைப்பொழுது நிகழ்வு

Sudharshini   / 2015 ஜூன் 22 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

திருமறைக் கலாமன்றமும் கெயார் நிறுவனமும் இணைந்து விழிகள் முற்றத்தின் பங்களிப்போடு வழங்கிய 'கலைப்பொழுது' நிகழ்வு  ஞாயிற்றுக்கிழமை (21) மன்னார் பேசாலையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், மன்னார், மாந்தை மேற்கு, நானாட்டான் ஆகிய மூன்று பிரதேசச் செயலாளர் பிரிவுகளையும் சேர்ந்த இளைஞர் மற்றும் யுவதிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார், மூத்த கலை இலக்கியவாதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வானது சமூக சீர்கேடுகளில் இருந்து இளைஞர் யுவதிகளை பாதுகாத்து வலுவூட்டும் ஒரு நிகழ்ச்சித்திட்டமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X