2025 ஜனவரி 06, திங்கட்கிழமை

யோகா.யோகேந்திரனின் இலக்கிய நூல்கள் வெளியீடு விழா

Princiya Dixci   / 2015 ஜூன் 18 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் யோகா.யோகேந்திரனின் மூன்று இலக்கிய நூல்களின் வெளியீட்டு நிகழ்வு, திகோ/திருக்கோவில் குமர வித்தியாலய கேட்போர் கூடத்தில் நாளை வெள்ளிக்கிழமை (19) மாலை 3.30 மணியளவில் இடம்பெறவுள்ளது. 

பாடசாலை அதிபர் ஆர்.இரத்தினகுமார் தலைமையில் இவ்வெளியிட்டு நிகழ்வு இடம்பெறவுள்ளது. 

யோகா.யோகேந்திரன் எழுதிய 'மீண்டும் ஒரு காதல் கதை' எனும் நாவல் நூல், 'அவர்கள் அப்படித்தான்' எனும் சிறுகதைத் தொகுப்பு மற்றும் 'தொலைத்து விட்டோம் எத்தனையோ' எனும் கவிதைத் தொகுப்பும் இதன்போது வெளியீட்டு வைக்கப்படவுள்ளன.

பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜனும் சிறப்பு அதிதியாக திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் ஆர்.சுகீர்தராஜனும் விசேட அதிதிகளாக திருக்கோவில் மாவட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் திருமதி எஸ்.இராஜேந்தின் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக வணிக முகாமைத்தவ பீடாதிபதி எஸ்.குணாலன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். 

கௌரவ அதிதிகளாக திருக்கோவில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன், திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.உதயசூரியா, அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவையின் செயலாளர் ஜலீல் ஜீ, கலாசார உத்தியோகஸ்தர் திருமதி ராதிகா கருணாகரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். 

இவ் வெளியீட்டு நிகழ்வுக்கு இலக்கிய ஆர்வலர்கள் பலரையும் கலந்துகொள்ளுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X