2025 ஜனவரி 06, திங்கட்கிழமை

நாடகப் போட்டியில் திருநாவுக்கரசு சிறுவர் இல்லம் தேசிய ரீதியில் முதலிடம்

Sudharshini   / 2015 ஜூன் 10 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -நா.நவரத்தினராசா

சிறுவர் கழகங்களுக்கிடையில் தேசிய ரீதியில் நடைபெற்ற நாடகப் போட்டியில் யாழ்ப்பாணம், சங்கானை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பனிப்புலம் திருநாவுக்கரசு சிறுவர் கழகம்  முதலிடத்தைப் பெற்றது.

உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு சிறுவர் அபிவிருத்தி அமைச்சின் தேசிய நன்னடத்தை திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட போட்டியில் மாவட்ட ரீதியாக இந்தக் கழகம் முதலிடம் பெற்று தேசிய மட்டத்தில் பங்குபற்றி அங்கும் முதலிடம் பெற்றுள்ளது.

முதலிடம் பெற்றமைக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த 6ஆம் திகதி கொழும்பு பஞ்சிகாவத்தை டவர் மண்டபத்தில் நடைபெற்றது. சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் றோஸி சேனநாயக்க, நன்னடத்தை திணைக்கள தேசிய ஆணையாளர் யமுனா பெரேரா ஆகியோரால் விருது வழங்கப்பட்டது. அத்துடன், சிறுவர் கழகத்துக்கு 25,000 ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது.

கழக சிறுவர்களுக்கு தனியான விருதுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் முதலிடம் பெற்ற நாடகம் விருது நிகழ்வில் மேடையேற்றப்பட்டது. தேசிய ரீதியில் சிறந்த துணை நடிகருக்கர், சிறந்த மேடை அமைப்பு, சிறந்த ஒப்பனை,  சிறந்த ஆக்கம்; ஆகிய நான்கு விருதுகளை யாழ் மாவட்டம் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

0


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X