2025 ஜனவரி 06, திங்கட்கிழமை

இந்து இளைஞர் மன்றத்தின் சித்திரைப் பூங்கா நிகழ்வு

Thipaan   / 2015 மே 26 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் வருடாந்த சித்திரைப் பூங்கா நிகழ்வு நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்றது.

இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் பொ. ஜெயராமன்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.  

பின்னர் காலை 8.30 மணிக்கு பாரம்பரிய விளையாட்டுக்கள்  இடம்பெற்றன.

இந்நிகழ்வில் நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்ற அறநெறிப் பாடசாலை மாணவர்கள் பங்குபற்றினர். மாணவர்களுக்கான திறந்த போட்டிகள், மகளிருக்கான திறந்த போட்டிகள், ஆண்களுக்கான  திறந்த போட்டிகள் என்பன இடம்பெற்றன.

இந்து இளைஞர் மன்ற அறநெறிப்ப பாடசாலை தலைமை ஆசிரியை திருமதி திலகமணி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  பரிசில்கள் வழங்கிவைத்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X