Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 06, திங்கட்கிழமை
Thipaan / 2015 மே 25 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
இணுவில் இந்துக் கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக நடத்தப்பட்ட விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வின் போது 'இணுவில் இந்து' நூல், கல்லூரி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (24) வெளியிடப்பட்டது.
கல்லூரியின் அதிபர் மு.செல்வஸ்தாசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், வரவேற்புரையை இ.ஐங்கரன், வாழ்த்துரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் க.தேவராஜா ஆகியோர் நிகழ்த்தினர்.
நூலின் வெளியீட்டுரையை யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட பேராசிரியர் இ.விக்னேஸ்வரனும் மதிப்பீட்டுரையை யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் ஈ.குமரனும் வழங்கினர்.
நூலின் முதற்பிரதியை பிரதம விருந்;தினராகக் கலந்துகொண்ட வலிகாமம் தெற்கு பிரதேச செயலர் மு.நந்தகோபன் வெளியிட்டு வைக்க, முதற்பிரதிகளை அண்ணா தொழிலதிபர் சார்பாக அவரது மகன் மற்றும் தொழிலதிபர் து.சிவராஜா, தொழிலதிபர் கே.ஆர்.சிவலோகநாதன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
5 hours ago
9 hours ago