2025 ஜனவரி 06, திங்கட்கிழமை

திருமறைக் கலாமன்றத்தின் தமிழ் விழா

Thipaan   / 2015 மே 23 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமறைக் கலாமன்றம் நடத்தும் தமிழ் விழா, எதிர்வரும் ஜூன் மாதம் 26, 27 மற்றும் 28ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெறவுள்ளது.

காலை 8.45 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ள இந்த விழாவில், ஈழத்து கலை இலக்கியம்  கருத்து நிலையும், இயங்குதளமும் என்னும் மையப் பொருளில் கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் உட்பட பல்வேறு துறைகளில் 24 தலைப்புக்களில் 6 அமர்வுகளாக ஆய்வரங்கம் நடைபெறவுள்ளது.

பொன் விழா ஆண்டில் திருமறைக் கலாமன்றம் முன்னெடுத்து வருகின்ற செயற்பாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக தமிழ் விழா அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X