2025 ஜனவரி 04, சனிக்கிழமை

'வாழ்வு தந்த வாஸ்' வரலாற்று நாடகம்

Sudharshini   / 2015 மே 05 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமறைக் கலாமன்றம் தயாரித்து வழங்கும், இலங்கையின் புனிதராகிய ஜோசப் வாஸ் அடிகளாரின்  'வாழ்வு தந்த வாஸ்' என்னும் வரலாற்று நாடகம் எதிர்வரும் 9 ஆம் 10 ஆம் திகதிகளில் மாலை 6.45 மணிக்கு யாழ்ப்பாணம்,  இல.238,பிரதான வீதியில் அடைந்துள்ள  திருமறைக் கலாமன்ற அரங்கில் மேடையேற்றப்படவுள்ளது.

இவ்வரலாற்று நாடகம் புனிதராகிய ஜோசப் வாஸ் அடிகளாரின் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட வரலாற்றை எடுத்துக்காட்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது.

இலவசமாக ஆற்றுகை செய்யப்படவுள்ள இந்நாடகத்துக்கான  எழுத்துரு, நெறியாள்கையை மன்றத்தின் பிரதி இயக்குநரான யோ.யோண்சன் ராஜ்குமார் மேற்கொண்டுள்ளார்.

இலங்கையின் திருத்தூதர் என அழைக்கப்பட்ட ஜோசப் வாஸ் அடிகளார் இவ்வாண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதி திருத்தந்தை பிரான்சிஸால் காலிமுகத் திடலில் வைத்து புனிதராகத் திருநிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X