2025 ஜனவரி 04, சனிக்கிழமை

'அகர ஆயுதம்' கலை இலக்கியச் சந்திப்பு

Thipaan   / 2015 ஏப்ரல் 26 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா

அகர ஆயுதம் கலை இலக்கியச் சந்திப்புக்கும் உரையாடலுக்குமான பொது வெளியின் நான்காவது அமர்வு, தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் பேரவையின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நேற்று சனிக்கிழமை (25) நடைபெற்றது.
 
இந்நிகழ்வு, 'ஆற்றல்மிகு இலக்கிய சமூகத்தைக் கட்டியெழுப்புதல்' எனும் தொனிப்பொருளில் தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பதிவாளரும் கவிஞருமான மன்சூர் ஏ காதர் தலைமையில் கலை கலாசார பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில், 'ஈழத்து இலக்கியத்துக்கு தென்கிழக்குப் பிராந்தியத்தின் பங்களிப்பு' எனும் தலைப்பில் பொதுவெளி உரையாடல் இடம்பெற்றது.

நவீனத்துவம், பின்நவீனத்துவம், மரபியல்வாதம் என்பன பேசு பொருளாக மாறி இங்கு  உரையாடல்களும் கருத்துருவாக்கங்களும் நடைபெற்றன.
 
மேலும், பல்கலைக்கழக மாணவர்களினது கலை நிகழ்ச்சிகளும் தமிழ்த்தென்றல் அலி அக்பர் தலைமையில் கவியரங்கமும்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் பீடாதிபதி எம். அப்துல் ஜப்பார், மொழித்துறைத் தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லா, சிரேஷ்ட அறிவிப்பாளர் கவிஞர் எஸ். றபீக், மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத், கவிஞர்களான தமிழ்த்தென்றல் அலி அக்பர், ஆசுகவி அன்புடீன், பாலமுனை பாறூக், ஒலிபரப்பாளர்களான நஜ்முல் ஹூஸைன், எம்.எஸ்.எம். ஜின்னாஹ், ஏ.எல். ஜபீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X