Thipaan / 2015 ஏப்ரல் 23 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு
திருக்கோவில், தம்பிலுவில் ஜெகாவின் விடைதேடி எனும் கவிதைத் தொகுதி, தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் பாடசாலை அதிபர் சோ.இரவீந்திரன் தலைமையில் சனிக்கிழமை (25) வெளியீட்டு வைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில், திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன் கவிதை நூலின் முதல் பிரதியை தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்தவ பீட தலைவர் செ.குணபாலன் பெற்றுக் கொள்ளவுள்ளார்.
இவ் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு அதிதியாக திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் திருமதி சு.இராஜேந்திரா மற்றும் விஷேட, கௌரவ, இலக்கிய அதிதிகள் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
தம்பிலுவில் ஜெகா எனும் புனைப் பெயரில் திருமதி ஜெகதீஸ்வரி நாதன் ஆசிரியை சுமார் 30 வருடங்களுக்கு மேலாக கவிதைத் துறையில் தனக்கெ ஒரு இடத்தை அடையாளப்படுத்திக் கொண்டு மரபுக்கவிதை, புதுக்கவிதை என எழுதிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
6 minute ago
16 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
16 minute ago
41 minute ago
1 hours ago