Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 17 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
சித்திரைப் புத்தாண்டையொட்டி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மகிடிக்கூத்து, புலிக்கூத்து ஆகிய கூத்துக்கள் சித்தாண்டி உதயன்மூலை கிராம அபிவிருத்திச்சங்க வளாகத்தில நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
சித்திரைப் புத்தாண்டையொட்டி ஊரெங்கிலும் கிராமிய விளையாட்டுக்கள், புலிக்கூத்து, மகிடிக்கூத்து நடைபெறுகின்றன. அந்த வகையில், பாரம்பரிய முறையாகவும் ஒரு தெய்வீக போக்கையும் கொண்ட மகிடிக்கூத்து, புலிக்கூத்துக்கள் இன்றைவரைக்கும் கிராமங்கள் தோறும் நடைபெறுகின்றன. கடந்த காலங்களில் அதுவே தமிழர்களின் பாராம்பரிய புதுவருட பொழுதுபோக்கு நிகழ்வாகவும் அமைந்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
மட்டக்களப்பு, சித்தாண்டி பிரதேசத்தில் சித்திரைப் புத்தாண்டுக்கு அடுத்துவரும் நாட்களில் கடந்த காலத்திலிருந்து பாரம்பரியமாகவும் தெய்வீக ரீதியாகவும் புலிக்கூத்து, மகிடிக்கூத்து என்பன ஆடுவது வழமையாக இருந்துவருகின்றது. இம்முறையும் சித்தாண்டி நான்கு பிரிவிலுள்ள மகிடிக்கூத்தாடும் கலைஞனர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட புலிக்கூத்தும் மகிடிக்கூத்தும் நடைபெற்றன.
மகிடிக்கூத்தில்; உடையார், விதானையார், காமாட்சி, மீனாட்சி, முனிவர்கள், குரத்தி குரவர் என பல்வேறுபட்ட காதாபாத்திரங்கள் காணப்பட்டன. இம்மகிடிக்கூத்துக்கு சோதிநாதன் தலைமை தாங்கி வழி நடத்தியிருந்தார்.
மகிடிக்கூத்து தொடர்பாக அண்ணாவியார் கருத்து தெரிவிக்கையில்,
சித்தாண்டியில் காலம் காலமாக எங்கள் பாட்டன் பூட்டன் அவர்களைத் தொடர்ந்து தற்பொழுது நாங்கள், புலிக்கூத்து மற்றும் மகிடிக்கூத்தை ஆடிவருகின்றோம். அந்த வகையில் சித்திரைப் புத்தாண்டுக்கு பின்னர் இவ்வாறான நிகழ்வுகள் மற்றும் விளையாட்டுக்களை சித்தாண்டி ஊரில் தொடங்கப்படும். காரணம் மக்களின் பொழுதுபோக்காக இவ்வாறான நிகழ்வுகள் அந்தக்காலம் தொடக்கம் இக்காலம் வரை இருப்பதினால் முற்றுமுழுதாக பொழுதுபோக்கு நிகழ்வாக இருக்கின்றமையாகும்.
அது மட்டுமின்றி வருடம் பிறந்து மறு நாட்களில் இவ்வாறான நிகழ்வுகளில் மத்தளம் அடிக்கும்போது கிராமத்திலுள்ள சிறு பிள்ளைகளுக்கு சிரங்கு மற்றும் சொறி என்பன பீடித்திருந்தால் அற்றுப்போயிடும் என்பனவும் மரபு. இந்த நிகழ்வுகள் ஒரு வகையில் தெய்வ பக்தி நிறைந்ததாகவும் இருக்கின்றது. இந்த நிகழ்வை ஆரம்பிக்கும்போது நாங்கள் காவல் தெய்வங்களுக்கு கும்பம் வைத்து சிறு பூசை செய்து ஆரம்பித்த பிற்பாடு மகிடி ஆட்டம் ஆரம்பிக்கும்.
இந்த நிகழ்வை பார்வையிட வருகின்ற சிறியவர்கள் தொடக்கம் பெரியவர்கள் என அனைவரும் நிகழ்வின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரைக்கும் சிரித்த வண்ணமே பார்வையிடுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது' என அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
45 minute ago
4 hours ago
5 hours ago