2025 ஜனவரி 01, புதன்கிழமை

இரு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா

Sudharshini   / 2015 மார்ச் 29 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி பண்டிதர் பரந்தாமன் கவின்கலைக் கல்லூரியின் ஒழுங்கமைப்பிலும் செந்தணல் வெளியீட்டகத்தின் வெளியீடாகவும் இரு சகோதர கவிஞர்களான வாகைக்காட்டன், புலவூரான் ரிஷி ஆகியோரின் 'நாரறுத்த நிலவுகள', 'சிறகுதரித்த சிலுவைகள்' ஆகிய இரு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்றுது.

வவுனியா தமிழ்ச்சங்கத்தின் அனுசரணையுடன் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில், தமிழருவி சிவகுமாரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில், வரவேற்புரையை ஜீவநாயகமும் ஆசியுரையை எஸ்.என்.ஜீ.நாதனும் வன்னியூர் செந்தூரன் அறிமுகவுரையையும் வெளியீடுரையை கலாபூசணம் எழுமலைபிள்ளையும்  நிகழ்த்தினர்.

நூல்பளின் முதற் பிரதியை தமிழ்மணி க. அருந்தவராஜா (மேழிகுமரன்) வெளியிட்டு வைக்க, கலைஞர் க.சவுந்தரராசா பெற்றுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X