Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 01, புதன்கிழமை
Sudharshini / 2015 பெப்ரவரி 28 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
'அகர ஆயுதம்' எனும் இலக்கியச் சந்திப்புக்கும் உரையாடலுக்குமான பொதுவெளி கவியரங்கும் உரையாடலும் நிகழ்வு சாய்ந்தமருது மல்ஹறுஸ் ஸம்ஷ் வித்தியாலயத்தில் இன்று (28) சனிக்கிழமை நடைபெற்றது.
கவிஞர் நவாஸ் சௌபி, தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூக விஞ்ஞானத்துறை விரிவுரையாளர் எம்.எம். பாஸில் ஆகியோர், எதிர்காலத்தில் எழுத்தாளர்களும் இலக்கியப் படைப்பாளிகளும் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் கருத்துரை வழங்கியதுடன் பல்துறைக் கவிஞர்கள் பங்குபற்றிய கவியரங்கும் சிறப்பாக நடைபெற்றது.
மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிரேஷ்ட இலக்கியவாதிகளும் கவிஞர்களுமான ஆசுகவி அன்புடீன், பாலமுனை பாறூக், எஸ்.முத்து மீரான், கிண்ணியா அமீர் அலி உட்பட பலர் கலந்துகொண்டு கவி நயத்துடனான கருத்துப் பரிமாறல்களை வழங்கினர்.
இந்நிகழ்வில் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்களும் கவிஞர்களும், கலைஞர்களும் அகர ஆயுதம் ஏற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
31 Dec 2024