2025 ஜனவரி 01, புதன்கிழமை

தாய்மொழி தினம்

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 22 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

நுண்கலைத்துறை வருடாவருடம் பெப்ரவரி 21 இல் 'சர்வதேச தாய்மொழி தினத்தை' கொண்டாடுகின்றமை வழமையாகும். அந்த வகையில்,  இந்தமுறை 'வழக்கிழந்து போகும் மொழிகள்' என்ற தலைப்பில்  உரையாடல் நடத்தும் நோக்கில், கிழக்கு பிராந்தியத்தில் வழக்கிலுள்ள பறங்கியர் சமூகம்; பேசும் மொழி தொடர்பிலும் அலிகம்பை குறவர் சமூகம்பேசும் தொடர்பிலும் ஆக்கபூர்வமான உரையாடல்களை நிகழ்த்தும் நோக்கில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

பறங்கியர் சமூகத்தில் பேச்சு வழக்கிலுள்ள போத்துக்கீஸ் மொழி பேசுகின்ற சிலரையும் தெலுங்குமொழி பேசக்கூடியவர்களையும் சிறப்பு உரைஞர்களாக அழைத்து நேற்று சனிக்கிழமை  இந்த நிகழ்ச்சி நுண்கலைத்துறையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை தலைவர் கலாநிதி வ.இன்பமோகனின் தலைமையிலும் விரிவுரையாளர் சு.சந்திரகுமாரின்; பொறுப்பிலும் கலாநிதி சி.ஜெயசங்கரின் வழிகாட்டலிலும் இடம்பெற்றது.

இதன்போது, அருட்தந்தை ஜோசப்மேரி அடிகளாரும் அருட்தந்தை இருதயராஜ் அடிகளாரும் (இவர் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்) அலிகம்பையைச் சேர்ந்த ஆறு சிறுவர்களும் தெலுங்குமொழி தொடர்பாக உரையாடி மகிழ்ந்து கொண்டாடினர்.

அவ்வாறே பறங்கியர் சமூகத்தின் மத்தியில் பேச்சு வழக்கில் உள்ள போத்துக்கீஸ் மொழியின் சிறப்புப் பற்றியும் அது பேசப்படுவது தொடர்பாகவும் நியூட்டன் செல்லர், எஸ்.ரி.ஒக்கஸ், அஞ்சலோ ஒற்றஸ், பகின் மரியோ வல்ரசார் ஆகியோர் இணைந்து உரையாடி, பாடல்களையும் பாடிக்காட்டினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X