Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Sudharshini / 2015 பெப்ரவரி 19 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கலையை நம்முள் புகுத்துவதினால் எதையும் நாம் இலகுவில் பெற்றுவிட முடியும். இசை என்பது சினிமாவுக்கு உரியது மட்டுமல்ல. இசை சினிமா வடிவில் மட்டும் வரும் போது அதனை இரசிக்கக்கூடாது. அதனை விடுத்து கர்நாடக தமிழிசை பாடல்களையும் இரசிக்க வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடாதிபதியும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் தலைவருமான பேராசிரியர் தி.வேல்நம்பி தெரிவித்தார்.
திருமறைக் கலாமன்றத்தின் பொன்விழா ஆண்டினை (1965 – 2015) முன்னிட்டு நடத்தப்பட்டு வரும் பொற்தூறல் எனும் மாதாந்த நிகழ்ச்சி தொடரின் இம்மாதத்துக்கான 'மாசித்திங்கள் பொற்தூறல்' விழா ஞாயிற்றுக்கிழமை (15) மணி கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
எமது தனித்துவ அடையாளத்தை பாதுகாப்பதோடு நமது கலைஞர்களை அடையாளப்படுத்த வேண்டும். அத்துடன் அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.
இசையோடு மனமுருகி பாடும் போதுதான் இறைவனை அடைய முடியும். ஏழிசை கொண்ட இசையுடன் தமிழ் பாடல்களை பாடும் போதுதான் இறையருளை அடைய முடியும். நாட்டிலுள்ள இல்லங்கள் தோறும் கலை ஒளி தோன்ற வேண்டும். அப்போதுதான் குடும்பம் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் என பாரதியார் தனது பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.
இசை இனம், மதம், மொழிகளுக்கு அப்பாற்பட்டதாகும். எமக்கு மொழி தெரியாவிட்டாலும் அம்மொழியுடன் வரும் இசை எம்மை ரசிக்க வைக்கிறது. தமிழ் பாடல்களை வெளிநாட்டவர் இரசிக்கிறார்கள். அதுபோல் பிற மொழிப்பாடல்களை நாம் இரசிக்கின்றோம்.
இந்தியாவில் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். அதற்கு அங்குள்ள தொலைக்காட்சிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. எமது மண்ணில் கலை நிகழ்வுகளை நடத்த வேண்டுமென்றால் இந்திய கலைஞர்களை அழைத்து வருகின்றார்கள். அதேபோல் நமது கலைஞர்களை இந்தியா அழைத்துச் சென்று அங்கு கலைநிகழ்ச்சிகளை நடத்துவதுக்கு இந்திய துணைத்தூதரகம் எற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். எமது கலைஞர்கள் வெளியே தெரிய வேண்டும் அதுதான் எனது ஆசை என அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago