Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 01, புதன்கிழமை
Administrator / 2015 பெப்ரவரி 12 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகையின் (175) ஈழத்துப் புலம்பெயர் சிறப்பிதழ், எதிர்வரும் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு பேராசிரியர் எம் ஏ.நுஃமான் தலைமையில் இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் முன்னிலையில் கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில், கௌரவ அதிதியாக பேராசிரியர் சி.தில்லைநாதன்; கலந்துகொள்ளவுள்ளார்.
ஞானம் கலை இலக்கிய பண்ணையின் உப தலைவர் ஆழ்வார்ப்பிள்ளை கந்தசாமி வரவேற்புரையையும் ஈழத்துப் புலம்பெயர் சிறப்பிதழின் வெளியீட்டுரையை 'ஞானம்' சஞ்சிகையின் நிர்வாக ஆசிரியர் ஞா. பாலச்சந்திரனும் நிகழ்த்தவுள்ளனர்.
நூலின் நயவுரையை பேராசிரியர் துரை. மனோகரனும் ஆய்வுரையை பேராசிரியர் வ.மகேஸ்வரனும்; கௌரவ அதிதி உரையை பேராசிரியர் சி. தில்லைநாதனும் நிகழ்த்தவுள்ளனர்.
இந்நிகழவில், 'செம்பியன் செல்வன்' ஞாபகார்த்தச் சிறுகதைப்போட்டி- 2014ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பும் 'ஞானம்' பதிப்பக 30 ஆவது வெளியீடான மணிவாசக அணியமுதம்' நூல் வெளியீட்டு விழாவும் இடம்பெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago
5 hours ago
31 Dec 2024