2025 ஜனவரி 01, புதன்கிழமை

வடமோடி கூத்துப்போட்டி - 2015

Kogilavani   / 2015 பெப்ரவரி 06 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே.எல்.ரி.யுதாஜித்


மட்டக்களப்பு மாவட்ட கல்வி அபிவிருத்திச் சங்கம் நடத்தும் வடமோடி கூத்துப்போட்டி - 2015க்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


விண்ணப்பங்களை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் பதிவுத்தபாலில், தலைவர், கல்வி அபிவிருத்திச் சங்கம், கல்லடி உப்போடை, மட்டக்களப்பு என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளது.


இதேவேளை,விண்ணப்பங்களுக்கு கல்வி அபிவிருத்தி சங்கத்தினை தொடர்புகொள்ள முடியும். மேலதிக தொடர்புகளுக்கு  0776160842, 0752150613 என்ற இலக்கத்தை தொடர்புக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


போட்டி விதிகளும் நிபந்தனைகளும்:


1.    போட்டியாளர்கள் பாடசாலை தவிர்ந்த ஏனைய கலைஞர்களாக இருக்கவேண்டும். (பாடசாலைக்கூடான குழுக்களாக இருத்தல் தவிர்க்கப்பட வேண்டும்)


2.    வடமோடி கூத்தின் கட்டமைப்புக்கு ஏற்றாற் போன்று அமைதல் வேண்டும். (அடிப்படை விதிமுறைகள் மாறக்கூடாது)

3.    பாரம்பரிய மரபு முறைகளை பின்பற்றியிருத்தல் வேண்டும்.


4.    பாத்திரங்கள் குறைந்தது ஐந்துக்கு (05) மேற்பட்டிருத்தல் வேண்டும்.


5.    கூத்து பிரதிகள் போட்டிக்கு இரு வாரத்துக்குமுன் கையளிக்கப்படல் வேண்டும்.

6.    கூத்தின் கதைக் கருதற்காலம் தவிர்ந்த புராண, இதிகாச கதைகளை கொண்டமைந்ததாக இருத்தல் வேண்டும்.

7.    நேரம் ஒரு (01) மணித்தியாலங்களுக்கு உட்பட்டிருத்தல் வேண்டும்.

8.    வட்டக்களரியில் ஆடக்கூடிய வகையில் கூத்து அமைந்திருக்க வேண்டும்.

9.    நிகழ்வு ஏற்பாட்டு குழுவினது அனைத்து சட்டதிட்டங்களுக்கும் போட்டிக்குழுக்கள் கட்டுப்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.

10.    கலந்துகொள்ள இருக்கின்ற கூத்தர்கள் ஏதோ ஒரு கலைக்கழகத்தின் ஊடாகவோஅல்லதுஅமைப்புக்கு ஊடாகவோ பங்குபற்ற வேண்டும்.

11.    ஒருகிராமத்தில் இருந்து எத்தனை கூத்துகுழுக்களும் பங்குபற்றலாம்.

12.    நடுவர்களின் தீர்ப்பு இறுதியானது.

13.    போட்டியில் வெற்றிபெறும் குழுக்களுக்கு 1ஆம் பரிசாக - 25,000 ரூபாயும்  2ஆம் பரிசாக - 15,000 ரூபாயும்  3ஆம் பரிசாக - 10,000 ரூபாயும் வழங்கப்படவுள்ளன.


விண்ணப்பத்தில்,குழுவின்,அமைப்பின் பெயர், கூத்தின் பெயர், அண்ணாவியாரின் முழுப்பெயர், பங்குகொள்வோர் முழுப்பெயர்கள் போன்றவிபரங்கள் உள்ளடக்கப்படவேண்டுமெனஏற்பாட்டுகுழுவினர் கோரியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X