2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பிரதேச கலை இலக்கிய விழாவும் கலைஞர்கள் கௌரவிப்பும்

Sudharshini   / 2014 டிசெம்பர் 30 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.சுகிர்தகுமார்


கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பிரதேச கலை இலக்கிய விழாவும் கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வும் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் சனிக்கிழமை (27) நடைபெற்றது.

ஆலையடிவேம்பு கலாசார உத்தியோகத்தர் என்.நவப்பிரியா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடமோடி கூத்து, பரதநாட்டியம் மற்றும் கலை நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்ன.

 ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பல்துறைகளில் மிளிர்ந்த கா.தேவசிகாமணி (முறிவுவைத்தியம்),  சி.குழந்தைவடிவேல்(ஆன்மீகம்), ப.தங்கவேல்(பூசகர்;), இ.நடராஜன்(ஊடகம்), வ.அமராவதி (சமூகசேவை) ஆகியோர், பிரதேச செயலாளரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், பிரதேச செயலக கணக்காளர் கே.கேசகன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக், கிராம உத்தியோகத்தர்களின் நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாச, திவிநெகும பிரதேச உத்தியோகத்தர் கே.நேசராஜா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .