2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பு மாவட்ட இலக்கிய விழா

Kogilavani   / 2014 டிசெம்பர் 05 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்; வியாழக்கிழமை மாவட்ட இலக்கிய விழா நிகழ்வுகள் மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றன.

மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்குப் பல்கலைக்கழக விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி கே.பிரேம்குமார் கலந்துகொண்டார்.

நிகழ்வில் காத்தான்குகு பிரதேச கலாசார நிலையத்தின் கிராமியப்பாடல், வவுணதீவு த.சாந்தகுமாரின் புல்லாங்குழல் இசை, எழுகதிர் சிறப்பு மலர் வெளியீடு, மாவட்ட இலக்கியப் போட்டியில் முதலிடம் பெற்ற கவிதைப்பாடல், மட்டக்களப்பு பிரதேச கலாசார நிலையத்தின் சமூக நாடகம், உள்ளிட் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

மாவட்ட இலக்கியவிழா சிறப்பு வெளியீடான எழுகதிர் சங்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டது.

எழுகதிர் சிறப்பு மலருக்கான நயவுரையை கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை தலைவர் திருமதி றூபி வலன்ரீனா பிரான்சிஸ் நிகழ்த்தினார்.

அத்துடன், கலைத்துறையில் பணியாற்றிய மண்முனைப்பற்றைச் சேர்ந்த சிற்பம் ஓவியம் ஆகிய துறைகளுக்காக ஐயம்பிள்ளை மகேசானந்தம், நாடகத்துறைக்காக முகமது இப்ராகிம் அப்துல் வாதூத், சித்த ஆயுர் வேதத்துறைக்காக போரதீவுபற்றைச் சேர்ந்த கோணமலை நாராயணப்பிள்ளை, சிறுவர் இலக்கியத் துறைக்காக மண்முனை வடக்கைச் சேர்ந்த மாஸ்ரர் சிவலிங்கம், கிராமிய கலைத்துறைக்காக மண்முனை தென்மேற்கைச் சேர்ந்த வேலுப்பிள்ளை மாசிலாமணி ஆகிய 5 கலைஞர்களுட்பட  பலர் கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம், போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் என் வில்வரெத்தினம், காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸ்சமில், கோரளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி கௌரி தினேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, மாவட்ட இலக்கிய விழாப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் இதன்போது வழங்கப்பட்டன.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .