2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

'காமரி முதல் கிராம நிலதார' வரை நூல் வெளியீடு

Kogilavani   / 2014 நவம்பர் 13 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா

ஓய்வுபெற்ற கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.சலீம் எழுதிய 'காமரி முதல் கிராம நிலதாரி' வரை எனும் வரலாற்று ஆய்வு  நூலின் அறிமுக விழா   ஞாயிற்றுக்கிழமை(16) கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை  மண்டபத்தில் நiபெறவுள்ளது.

புரவலர் ஹாசீம் ஒமர் முன்னிலையில் சம்மாந்துறை தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபர் எம்.ஏ.பாறுக் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில்  இலங்கை தென்கிழக்கப் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபக உப வேந்தர் கலாநிதி எம்.எல்.ஏ.காதா, முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் அமீர் இஸ்மாயீல்,   முஸ்லீம் சமய பன்பாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.எச்.எம்.ஜெமீல், இலங்கை தென்கிழக்கப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறைத் தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லா, மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீட், தேசபந்து ஏ.பீ.அப்தல் கையூம், எம்.எல் மக்கீன் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

நூலின் அறிமுக உரையை சம்மாந்துறை  தேசிய பாடசாலை பிரதி அதிபர் எச்.எம்.அன்வர் அலியும் நயவுரையை  தென்கிழக்கப் பல்கலைக்கழகத்தின் பிரதிப் பதிவாளர் கவிஞர் மன்சூர் ஏ காதிரும்; ஆற்றவுள்ளதோடு   நூலின் முதல் பிரதியை புரவலர் ஹாசீம் ஒமர் பெற்றுக் கொள்ளவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .