2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

தெருவெளி ஆற்றுகை

Sudharshini   / 2014 நவம்பர் 13 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எஸ்.குகன்

வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான் என்ற கருத்து  அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். மனிதனானவன் தன்னுடைய அறிவினை பெருக்கி கொள்வதற்கான ஊடகமாக வாசிப்பை பயன்படுத்துகின்றான்.

தற்போது, வாசிப்பானது இளம் சமூதாயத்தினரிடையே அருகி செல்கின்றது என்ற குற்றச்சாட்டு  அனைவராலும் பொதுவாக முன்வைக்கப்படுகின்ற ஒன்றாகும். 

இளம் சமூகத்தினரிடையே வாப்பின் அவசியத்தை உணர்த்தி அவர்களை ஊக்குவிப்பது இன்று மிக முக்கியமான ஒரு விடயமாக காணப்படுகின்றது.

வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், வருடாந்தம் நூலகங்களை அடிப்படையாக கொண்டு தேசிய வாசிப்பு மாத நிகழ்ச்சி நிரலானது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, இணுவில் பொது நூலகத்தினால் வாசிப்புப் பழக்கத்தை இளம் சமூதாயத்தினரிடையே  ஊக்குவிக்கும் ஊடகமாக  தெரு வெளி ஆற்றுகையானது யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் நிலையாக ஆற்றுகை செய்யப்பட்டு வருகின்றது.

வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் பிரச்சார ஊடகமாக புத்தாக்க அரங்க இயக்க கலைஞர்களினால் மேற்கொள்ளப்படும் வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான் என்ற ஆற்றுகையாகும்.

(வாசிப்பால் நாம் உயர்வோம்) என்னும் தெரு வெளி ஆற்றுகையானது ஆற்றுகை செய்யப்பட்டு வருகின்றது.

வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான் (வாசிப்பால் நாம் உயர்வோம்) என்னும் தலைப்பிலான  தெரு வெளி ஆற்றுகையானது வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில்  புத்தாக்க அரங்க இயக்க கலைஞர்களினால் யாழ். மாவட்டத்தின் பாடசாலைகள,; தனியார் கல்வி நிலையங்கள், பொது இடங்கள், சனசமூக நிலையங்கள், ஆலய வீதிகள்  போன்ற 300 இடங்களில் ஆற்றுகைப்படுத்தப்பட்டது. 

இத்தெருவெளி ஆற்றகைக்கான நெறியாள்கையை புத்தாக்க அரங்க இயக்கத்தின் பணிப்பாளரும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் நாடகத்துறை ஆசிரியருமாகிய எஸ்.ரி.குமரன், புத்தாக்க இயக்கத்தின் நிர்வாக பணிப்பாளரும் மானிப்பாய் இந்து கல்லூரியின் நாடகத்துறை ஆசிரியருமாகிய எஸ்.ரி.அருள்குமரன் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.

ஆற்றுகையாளர்களாக தயாநிசன், லிவின்சன், கவிராஜ், பிரசாந்தன்,  லோன்சன், மகிந்தன், தபேன்சன், உசாந்தன்,  திலக்சன்,  நிதர்சன் போன்றோர் நடித்துள்ளனர்.

இத்தெருவெளி ஆற்றுகையானது பெரும்பாலும் பாடசாலை மாணவர்களையே பார்வையாளராக கொண்டு ஆற்றுகை செய்யப்பட்டது.
தேசிய வாசிப்பு மாத நிகழ்வில் மூன்றாவது வருடமாக தெருவெளி ஆற்றுகை நிகழ்த்தப்படுகின்றமை சிறப்புக்குரிய விடயமாகும்.

பாடல், ஆடல் மற்றும் நகைச்சுவை உணர்வின் ஊடாக தெரு வெளி ஆற்றுகையானது வாசிப்பின் அவசியம் கருதிய கருத்தினை பிரச்சாரப்படுத்தியிருந்தது.

எம்மிடையே காணப்படுகின்ற கல்வி நடைமுறையின் குறைபாடு காரணமாக பரீட்சை மையக்கற்கை நெறியே காணப்படுகின்றது.

இது ஒரு வகையில் திணிப்புசார் கல்வி செயற்பாடாக காணப்படுகின்றது. பாடசாலைகளில் ஆசிரியர்களாலும் வீடுகளில் பெற்றோர்களாலும் கல்வியானது திணிக்கப்படுகின்றது. இக்கல்வி செயற்பாடு காரணமாக சுயசிந்தனை சுய ஆளுமையற்ற புதிய தேடலை மேற்கொள்ளாத சமூதாயம் ஒன்று உருவாக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.

இத்தகைய கல்வி நடைமுறைகளுக்கு மேலாக சுயதேடல் புத்தாக்க சிந்தனையுடைய மாணவர்களாக எமது இளம் தலைமுறையினர் உருவாகுவதற்கு வாசிப்பு பழக்கமானது அவசியப்படுகின்றது என்பதை இத்தெருவெளி ஆற்றுகை உணர்த்துவதாக அமைகின்றது.
இத்தெருவெளி ஆற்றுகையானது அனைத்து தரப்பினரிடையேயும் வரவேற்பினை பெற்ற ஒன்றாக விளங்குகின்றது.

நகைச்சுவை உணர்வின் ஊடாக சொல்லவந்த விடயத்தினை பார்வையாளர்களுக்கு இலகுவாக  எடுத்து சொல்லும் முறைமை இவ்வாற்றுகைக்கு பலம் சேர்க்கின்றது.

சமூகத்தின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதிலும் சமூகப்பணியை மேற்கொள்வதிலும் சிறந்த ஊடகமாக நாடகக்கலை விளங்குகின்றது.
இதன் அடிப்படையில் வாசிப்பின் அவசியத்தை இளம் தலைமுறையினருக்கு எடுத்து செல்கின்ற ஊடகமாக தெருவெளி ஆற்றுகையானது நிகழ்த்தப்பட்டது.

இத்தகைய தெருவெளி நாடககங்களுக்குரிய முழுமையான பண்புகளை கொண்டமைந்த சிறந்த ஆற்றுகையாக பெரும் எண்ணிக்கையாளர்களிடம் சென்றடைந்துள்ளமை சிறப்பிற்குரிய விடயமாகும்.

வாசிப்பின் முக்கியத்துவம் கருதி இளம் தலைமுறையினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் புத்தாக்க அரங்க இயக்க கலைஞர்களினால் ஆற்றுகை செய்யப்பட்ட வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான் என்ற தெருவெளி ஆற்றகையானது காலத்தின் தேவை கருதி  ஆற்றுகை செய்யப்பட்ட ஒன்றாக அமைந்துள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .