2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

எழுவானில் கலை இலக்கிய பெருவிழா

Sudharshini   / 2014 நவம்பர் 13 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம். ஹனிபா

2014ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் வெளிவந்த சிறந்த நூல்களை எழுதிய ஆசிரியருக்கான   'வித்தகர் விருது' வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (13)  அம்பாறை டீ.எஸ். சேனாநாயக்க தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைகளத்தின் பணிப்பாளர் டபிள்யூ.எல். விக்கிரம ஆராச்சி தலைமையில், கிழக்கு மாகாண கல்வி மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சர் விமல வீர திஸாநாயக்க  பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

சிறுகதை : என்னடா கோலமும் கோத்திரமும் - எஸ். முத்துராமன்
கவிதை : மண்ணில் புதைந்த வரலாறு – முல்லை வீரக்குட்டி
எல்லாள காவியம் - ஜின்னாஹ் ஷரிபுடீன்
விமர்சனம் : கல்விச்சமூகம் எதிர்பாக்கும் வகிபங்கும் - ஏ.எல். நௌபீர்
பல்துறை : ஆளுமை மிக்க மாணவன் ஆரோக்கியமான கற்றலை நோக்கி – அஷ்ஷேக் எம்.எச்.வஹாப்
திருகோணமலை மாவட்ட கிராமிய பாடல்கள் - ச. அருணாநந்தம்
ஆய்வு : சிலம்பு கூறலும் கண்ணகி வழக்குரையும்
ஒப்பாய்வு – ஆறுமுகம் அரசரத்திணம்
சம்பூர் பிரதேசத்தின் தொன்மை - அருமைநாதன் சதீஸ்குமார்
உயர்கல்வி பிறப்புரிமையியல் - சுபாலினி இளங்கோ
சிறுவர் இலக்கியம் - பளிங்கு மாளிகை – முகில் வண்ணன் (வே. சன்முகநாதன்)

மேற் குறிப்பிட் நூல்களே இவ்வருடத்தில் கிழக்கு மாகாணத்தில் வெளிவந்த சிறந்த நூல்கள் என, கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு மாகாண கலாசார உத்தியோகத்தர் க. அன்பழகன் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .