2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

கணித நாடகப் போட்டியில் புஸ்ஸல்லாவை இந்து தேசிய கல்லூரி முதலாமிடம்

Sudharshini   / 2014 நவம்பர் 10 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பா.திருஞானம்

கண்டி மாவட்டம் உடபளாத்த பிரதேசத்துக்குட்பட்ட, புஸ்ஸல்லாவை இந்து தேசிய கல்லூரி, தேசிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் இடம்பெற்ற கணிதபாட நாடகப் போட்டியில் முதலாமிடத்தை  பெற்றுக்கொண்டது.

முதலாமிடத்தை பெற்ற மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாராட்டும் நிகழ்வு, புதன்கிழமை (05) கல்லூரியின் அதிபர் திருமதி ரவிசந்திரிக்கா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்,  மாணவர்களின் நாடகமும் மேடையேற்றப்பட்டன.


இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மத்திய மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் சதீஸ், கம்பளை கல்வி வலய கல்வி அதிகாரிகள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரகள், பழைய மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், இப்பாடசாலை தொடர்ந்து மூன்று முறை (2012, 2013, 2014) பங்குபற்றி வெற்றியீட்டி  ஹட்ரிக் சாதனையை படைத்துள்ளது.

இப்போட்டியில், பெரிய பண்டி விரிச்சான் தழிழ் வித்தியாலயம் இரண்டாம் இடத்தையும் திருகோணமலை சென்.மேரிஸ் மகளிர் கல்லூரி மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X