2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

'என் எழுத்தாயுதம்' நூல் வெளியீடு

Kogilavani   / 2014 நவம்பர் 03 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரனின் 'என் எழுத்தாயுதம்' நூல் வெளியீடு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(9) பம்பலப்பிட்டி, சரஸ்வதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம், திசைகாட்டி குழுமத்தின் அனுசரணையில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் வாழ்த்துரையை, வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் எஸ்.தவராசா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஆற்றவுள்ளனர்.

வெளியீட்டுரையை கம்பவாரதி இ.ஜெயராஜும் நயப்புரையை சிரேஷ்ட சட்டத்தரணி ஜி.இராஜகுலேந்திராவும்  ஏற்புரையை நூலாசிரியரும் ஆற்றவுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நூலை வெளியிட்டு வைக்க, நூலின்  பிரதிகளை கொழும்பு நபர பிதா ஏ.ஜெ.எம்.முஸம்மில், வீரகேசரியின் நிர்வாக இயக்குநர் குமார் நடேசன், தினக்குரல் பத்திரிகையின் நிர்வாக இயக்குநர் எஸ்.பி.எஸ்.கேசவராஜா, நாவலர் நற்பணி மன்றத்தின் ஸ்தாபகத் தலைவர் கருணை ஆனந்தன், ரி.ஏ.கொன்ஸ்ரக்ஸன்ஸ் இயக்குநர் செல்வ.திருச்செல்வன் ஆகியோர் பெற்றுகொள்ளவுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X