2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

இரு நூல்கள் வெளியீடு

Kogilavani   / 2014 ஒக்டோபர் 29 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.ஹனிபா

அட்டாளைச்சேனை எஸ்.எல்.மன்சூர் எழுதிய பதிவுகளின் சங்கமம், மொழியின் செழுமை ஆகிய நூல்களின் வெளியீட்டுவிழா எதிர்வரும் சனிக்கிழமை(1) அட்டாளைச்சேனை பலநோக்கக் கூட்டுறவுச் சங்க சமாஜத்தில்; நடைபெறவுள்ளது.

இலங்கையில் வெளியான சுமார் 200க்கும் மேற்பட்ட நூல்களை ஆய்ந்து, விமர்சனக்குறிப்புரைகள் எழுதியுள்ள அட்டாளைச்சேனை எஸ்.எல்.மன்சூர் அவற்றிலிருந்து தெரிவு செய்த முப்பது நூல்களின் விமர்சனக் கண்ணோட்டங்கள் பதிவுகளின் சங்கமத்தில் சங்கமித்துள்ளன.

அத்துடன், தரம் 4, 5 மாணவர்களின் மொழிப்புலமையினை சீர்படுத்தும் மொழிசார்ந்த பல்வேறுதரப்பட்ட கிரகித்தல் பயிற்சிகள், கட்டுரைப்பயிற்சிகள் போன்றவற்றை பாடத்திட்டத்துடன் சார்ந்ததாக தயாரிக்கப்பட்டுள்ள மொழியின் செழுமை எனும் நூலும் வெளியிடப்படவுள்ளது. 

தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷட விரிவுரையாளரும், அட்டாளைச்சேனை ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவருமான ஏ.எல்.ஹனீஸ் தலைமையில்; நடைபெறவுள்ள வைபவத்தில், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
ஏ.எல்.எம்.நசீர், கிழக்கு மாகாண முதலைமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ், அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசீம் மற்றும் சுடர்ஒளி, தமிழ்த்தந்தி, அகவிழி ஆகியவற்றின் பிரதம ஆசிரியர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .