2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வாழும்போதே கலைஞர்களை வாழ்த்தும் செயற்றிட்டம்

Gavitha   / 2014 ஒக்டோபர் 18 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை தரிசனம் வெளியீட்டு பிரிவினரால் முன்னெடுத்து வரும்  வாழும்போதே கலைஞர்களை வாழ்த்தும் செயற்றிட்டத்தின், முதலாவது நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (12) சல்லி அம்பாள் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஈழத்து கிராமிய தெய்வீக காவடி சிந்து இறுவட்டு வெளியீடு நிகழ்வு நடைபெற்றதோடு, அதனைப் பாடிய கலைஞர் கலாபூசனம் அப்பாத்துரை சித்திரவேலாயுதத்தை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

அகில இலங்கை சர்வமத செயற்பாட்டு ஒன்றிய தலைவர் சிவாகம் சிரோன்மணி சிவபிரம்ம ஸ்ரீ இராஜசுந்தர பத்மநாத குருக்கள், கலைஞருக்கு கிராமிய இசைத்திலகம் என்னும் கௌரவ பட்டத்தினை வழங்கி வைத்தார்.

ஓய்வுபெற்ற தபால் அதிபர் இ.சிதம்பரநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் பிரதம அதிதியாகவும் திருகோணமலை நகர சபை தலைவர் க.செல்வராசா கௌரவவிருந்தினராகவும் மேலும், கவிஞர் க.கோணேஸ்வரன், லக்ஷ்மிநாராயணர கோயில் ஆதீனகர்த்தா ராதாகிருஷ்ணன், மருத்துவர் வி.ராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .