2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

கலைகளின் சங்கமம்

Gavitha   / 2014 ஒக்டோபர் 11 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நேகா
, வடிவேல் சக்திவேல் 

இந்துகலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திருமதி.சாந்திநாவுக்கரசன்  வழிகாட்டலில், பாரம்பரிய கலைகளின் சங்கமம்  வெள்ளிக்கிழமை (10)  நாவற்குடா இந்துக்கலாசார நிலையத்தில் ஆரம்பமானது.

இந்துகலாசார அலுவல்கள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் ம.சண்முகநாதன் தலைமையில், பிரதம விருந்தினராக மாவட்ட செயலாளர்.பி.எஸ்.எம்.சார்ள்ஸ், சிறப்பு விருந்தினராக பேராசிரியர் எஸ்.மௌனகுரு, கலாநிதி எஸ்.ஜெயசங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலைகளின் சங்கமமாக, வந்தாறுமூலை நவரத்தினம் கலைக்குழுவின் மகிடிக் கூத்து, கன்னன்குடா கதிரவன் கலைக்குழுவின் கரகம், பருத்திச்சேனை கலைமகள் கலைக்கழகத்தின் தென்மோடிக் கூத்து, முனைக்காடு நாகசக்தி கலைக் குழுவினரதும் தேற்றாத்தீவு கிராமிய கலைக்கழகத்தினரதும் வடமோடிகூத்தும் வசந்தன்கூத்தும், பொகவத்தலாவ மலையக கூத்தியல் கலைக்குழுவினரின் காமன்கூத்தும், வாகரை ஆதிவாசி கலைக் குழுவினரின் வேடுவர் ஆட்டம், பக்தநந்தனார் இணுவில் கந்தசாமி கோவில் இளம்தொண்டர் சபையினரின் இசைநாடகமும் மேடையேற்றப்பட்டன.

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்நிகழ்வில், இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை  கலைஞர்களுக்கான கௌரவிப்பும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X