2024 நவம்பர் 02, சனிக்கிழமை

'நதியை பாடும் நந்தவனங்கள்' நூல் வெளியீடு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 29 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல் சக்தி


பொருளாதார அபிவிருத்தி பிரதியரமச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் சேவைகளை பாராட்டி 50 கவிஞர்களால் எழுதப்பட்ட நதியைப்பாடும் நந்தவனங்கள் கவிதை நூல் வெள்ளிக்கிழமை மாலை வெளியீட்டு வைக்கப்பட்டது.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் தென்கிழக்கு பல்கலைகழக உபவேந்தர் கலாநிதி எஸ்.முஹம்மது இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், றிசாட் பதியுதீன், பசீர் சேகுதாவூத், பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், தென்னிந்தியாவின் வாணியம்பாடி இஸ்லாமிய கலலூரி பேராசிரியர் முனைவர் கவிமாமணி தி.மு.அப்துல்காதர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது இந்நூலில் கவிதைகளை எழுதியுள்ள இலங்கையிலுள்ள ஐம்பது கவிஞர்களும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் இவர்களுக்கு பொற்கிழிகள் வழங்கப்டபட்டன. 

இதன்போது தென்னிந்தியாவின் வாணியம்பாடி இஸ்லாமிய இஸ்லாமிய கல்லூரி பேராசிரியர் முனைவர் கவிமாமணி தி.மு.அப்துல்காதர் தலைமையில் பத்து கவிஞர்கள் பங்கு கொண்ட கவியரங்கும் நடைபெற்றது.

மூத்த ஊடகவியலாளரும் தேசிய சாஹித்ய மண்டல விருது பெற்ற கவிஞருமான ரீ.எல்.ஜவ்பர்கானின் தொகுப்பில் வெளிவந்துள்ள இந்நூலின் நயவுரையை கலாநிதி கே.பிரேம்குமார், கலாநிதி எம்.றமீஸ் அப்துல்லாஹ் ஆகியோர் வழங்கினர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .