கவிஞர் கருணாகரனின் மூன்று நூல்களான வேட்டைத்தோப்பு, இப்படி ஒரு காலம், நெருப்பின் உதிரம் ஆகியவற்றின் வெளியீட்டு நிகழ்வு அண்மையில் கிளிநொச்சி மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் பெருமளவான வாசகர்கள் கலந்துகொள்ள சிறப்புற இடம்பெற்றது.
கரைச்சி பிரதே செயலாளர் கோ.நாகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நூல் அறிமுக உரைகளை கவிஞர் சோ.பத்தமநாதன்,ஊடகவியலாளர் சிதம்பிரபிள்ளை சிவகுமார், ஆய்வாளர் யதீந்திரா ஆகியோர் நிகழ்த்தினர்.
கருணாகரனின் கவிதைகளில் ஏற்பட்டுள்ள அழகியல், அரசியல் வளர்ச்சிகளை அவருடைய கவிதைகளைச் சாட்சியமாக வைத்து உரையாற்றினார் சோ. ப.
படைப்பாளியின் அரசியல் எதுவாக இருந்தாலும் கலையில் அது சாட்சிமாக, சார்பற்று. நீதியின்பாற்பட்டிருக்க வேண்டும். நமக்கு இன்னொருவர் எதிரியென்றால். அவர்களுக்கு நாங்கள் எதிரி என்ற யதார்த்தத்தையும் உண்மையையும் புரிந்கொள்ள வேண்டும் என்றார் சிதம்பரப்பிள்ளை சிவகுமார்.
எத்தகைய பேரழிவுகளும் எமக்குச் சாதாரணமானவையாகவே இருக்கின்றன என்ற கோடன் வைஸின் கருத்தை நாம் கவனிக்க வேண்டும். அவர்களைப் பொறுத்தவரை இந்த மாதிரிப் பல விசயங்களைக் கண்டு கடந்தவர்கள். வைஸ் தன்னுடைய கூண்டு என்ற நூலுக்கான முன்னுரையைப் படித்தாலே மேற்கின் இதயத்தையும் மூளையையும் நாம்புரிந்து கொள்ள முடியும் என்றார் யதீந்திரா.
புத்தகங்களை கரைச்சி பிரதேச செயலாளர் வெளியீட்டு வைக்க கிளிநொச்சி மாவட்டச் செயலாரும் கிளிநொச்சியைச் சேர்ந்தவருமான திருமதி றூபவதி கேதீஸ்வரன் பெற்றார்.