2024 நவம்பர் 02, சனிக்கிழமை

கண்ணகி கலை இலக்கிய விழா

Gavitha   / 2014 ஓகஸ்ட் 02 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.ஏ.றமீஸ்

கண்ணகி கலை இலக்கியக் கூடலினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்ணகி கலை இலக்கிய விழா வெள்ளிக்கிழமை (01) தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலய கலை அரங்கில் ஆரம்பமானது.

இந்நிகழ்வு,  விழாக்குழுக் குழுத் தலைவர் வீ.ஜயந்தன் தலைமையில்  காலை வேளை பண்பாட்டுப் பவனி திருக்கோவில் மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து, பண்பாட்டு கலை கலாசார நிகழ்வுகளுடன் பிரதான வீதி வழியாக தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து கண்ணகி அம்மன் ஆலயத்தில் விஷேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயத்தின் கலை அரங்கில் காலை அமர்வுக்கான நிகழ்வுகள் கூலவாணிகன் சாத்தனார் அரங்கில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் டபிள்யு.ஏ.எல்.விக்ரம ஆராச்சி, கண்ணகி கலை இலக்கியக் கூடலின் காப்பாளர் பேராசிரியர் சி.மௌனகுரு, பிரதேச செயலாளர் சி.ஜெகராஜன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஷ்வரி உட்படு பலர் கலந்துக்கொண்டனர்.

இந்நிகழ்வின் போது கண்ணகி கலை இலக்கியக் கூடலின் துணைச் செயலாளர் திருமதி சுந்தரமதி வேதநாயகம் கண்ணகி இலக்கிய விழாப் பட்டயத்தினை வாசித்தார். தொடர்ந்து தம்பிலுவில் கண்ணகி வழிபாடு ஒரு வரலாற்று நோக்கு எனும் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.

நிகழ்வில்  தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான கொம்பு முறி விளையாட்டின் ஓர் அங்கமான போர்த் தேங்காய் அடிக்கும் நிகழ்வு ஆலய முன்றலில் நடைபெற்றது.

இந்நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (03) மாலை நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .