2024 நவம்பர் 02, சனிக்கிழமை

'சோர்விலாச்சொல்' நூல் வெளியீடு

Super User   / 2014 ஜூலை 27 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவுத்தின் 'சோர்விலாச்சொல்' நூல் வெளியிட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (03) பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் மாலை 4.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

நவமணியின் பிரதம ஆசிரியரும் முஸ்லிம் கவுன்சிலின் தலைவருமான என்.எம.அமீன் அல் ஹாஜ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹஸன் அலி வவேற்புரையை நிகழ்த்தவுள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறை,கலைப்பீட பேராசிரியர் கலாநிதி எம்.எஸ்.எம் அனஸ் நூலுக்கான திறனாய்வை மேற்கொண்டுள்ளார்.

இந்தியா குருநானக் தேவ் பல்கலைகழக ஸ்ரீ குரு கிராந் கற்கைகளுக்கான ஆய்வு மையத்தின் பேராசியர் காலாசிதி என்.முத்து மோகன், ஐக்கிய ராச்சியம் திருக்குடும்ப தொழிநுட்ப கல்லூரியின் கணித,பௌதீக  விரிவுரையாளர் ரவிச்சந்திர சுந்தரலிங்கம் ஆகியோர் நூலுக்கான சிறப்புரையை வழங்கவுள்ளனர்.

இந்நூல் வெளியிட்டு விழாவில் முதற்பிரதியை புரவலர் ஹாஷிம் உமர்  பெற்றுக்கொள்ளவுள்ளதுடன்  பிரதம அதிதி உரையினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கிம் நிகழ்த்தவுள்ளார்.

இந்நிகழ்விற்கான ஏற்புரையையும் நன்றியுரையையும் நூல் ஆசுpரியர் பஷீர் சேகுதாவூத் வழங்கவுள்ளார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .