2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

நுவரெலியாவில் பாம்பே சாரதா

Kanagaraj   / 2014 ஜூன் 18 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எஸ்.தியாகு


நான் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு இலங்கைக்கு வந்த பொழுது மிகுந்த பயத்துடன் வந்திருந்தேன். அன்று இலங்கையில் யுத்தம் இருந்தது. இன்று பயம் இன்றி வந்திருக்கின்றேன். இன்று யுத்தம் இல்லை; வெடிச் சத்தங்களும் இல்லை; பாதைகளில் சோதனைச் சாவடிகளும் இல்லை.
இப்படி குறிப்பிடுகின்றார் தென்னிந்தியாவின் பிரபல பாடகி செல்வி பாம்பே சாரதா.

இவர் தமிழ் திரைப்படமான பம்பாய் திரைப்படத்தின் குச்சி குச்சி ராக்கம்மா என்ற பாடலை பாடியதன் மூலம் இந்திய தமிழ் திரையுலகிற்கு பிரவேசித்துள்ளார்.

அதனை தொடர்ந்து இவர் பாடிய 350 இற்கும் அதிகமான இறுவெட்டுக்கள் வெளியாகியுள்ளதுடன், பல்வேறு நாடுகளுக்கும் சென்று ஆன்மீக இசைக்கச்சேரிகளையும் நடத்தி வருகின்றார். இவர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.

நுவரெலியாவில் அமைந்துள்ள ஸ்ரீ காயத்திரி ஆலய நிர்வாகத்தினரின் அழைப்பின் பேரில் வருகை தந்த  பாம்பே சாரதா, காயத்ரி சித்தர் முருகேசு சுவாமியின் புகழ்மாலை என்ற  இருவெட்டை வெளியீட்டில் கலந்து கொண்டதுடன் இலவசமாக ஆன்மீக இசைக்கச்சேரி ஒன்றையும் நடத்தினார்.

இந்நிகழ்விற்கு இலங்கைக்கான உதவி இந்திய தூதுவர் ஏ.நடராஜன் தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்கது.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .