2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

நூல் வெளியீடு

Kanagaraj   / 2014 ஜூன் 14 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

எபிக் வெளியீட்டுப்  பணியகத்தின் கலை இலக்கிய சிறகு நடாத்தும்  நூல் வெளியீட்டு விழாவும் மாணவர் கௌரவிப்பும் விழாவும் ஞாயிற்றுக்கிழமை (15) 4.00 மணிக்கு இடம் பெறவுள்ளது.

கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெறவிருக்கும் இந்நிகழ்வில், திருமதி ஏ.ஏ.பாத்திமா நசீரா அலி  எழுதிய  'அருண்' நூல் வெளியி;ட்டு வைக்கப்படவுள்ளது.

எபிக் கல்வி நிறுவனத்தின் தலைவர் எம்.எம்.சிறாஜி  தலைமையில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்வில் மஹரகம  தேசிய கல்வி நிறுவனத்தின்  பிரதிப் பணிப்பாளர் நாயகம்  பேராசிரியர் பி.சி.பக்கீர் ஜஹ்பர் பிரதம  அதிதியாக கலந்துக்கொள்ளவுள்ளார்.

கௌரவ அதிதிகளாக பிரதிக் கல்விப்பணிப்பாளர் இஸட்.எம்.நதீர் மௌலவி, கலாபூசணம் எம்.ஐ.எம் .முஸ்தபா ஆகியோரும் விசேட அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.எம். அப்துல் ரகுமான்  ஆகியோரும் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .