2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

கண்ணகி கரகாட்ட அரங்கேற்றம்

Kogilavani   / 2014 ஜூன் 06 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


கண்ணகி கரகாட்ட அரங்கேற்றம்  வியாழக்கிழமை (05) மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட களுதாவளை கிராமத்தில் நடைபெற்றது.

இலங்கேசன் இந்து மன்ற அமைப்பின் தலைவர் ஏ.வியாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.கனகசபை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமைல), கிழக்குப் பல்பலைக்கழக கலை கலாசார பீட முன்னாள் பீடாதிபதி போராசிரியர் சி.மௌனகுரு, கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர் சு.சீவரெத்தினம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச கலாசார உத்தியோகஸ்தர் த.பிரபாகரன், மற்றும் கிரம பெரியோர்கள், ஆலயங்களின் பிரமுகர்கள் பொதுமக்கள் கலைஞர்கள், என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கண்ணகி அம்மனைப் பற்றிய கதையுருவில் இக்கரகத்தில் நடிக்கும் சிறுமியர்களுக்கு சதங்கை அணிவிக்கப்பட்டு கரகம் மேடையேற்றப்பட்டது.

இக்கரகத்திற்குரிய பாடல்களை க.தெய்வநாயகம் மற்றும் ச.வித்யா   பாடினர்.

இளம் அண்ணாவியார் த.ஹேமாயிதன்; தாளத்தில் க.சந்திரலிங்கம் நெறியாள்கையின் கீழ் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.










You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .