2024 நவம்பர் 02, சனிக்கிழமை

கிழக்கில் தமிழ் மொழித்தின போட்டிகள்

Kogilavani   / 2014 ஜூன் 02 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் அகில இலங்கை தமிழ் மொழித்தின கிழக்கு மாகாண மட்ட போட்டிகள் ஞயிற்றுக்கிழமை (01) மட்.களுதாவளை மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. 

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் தலைமையில் ஆரம்பிக்கப் பட்ட இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்வி அதிகாரிகள், அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

பட்டிருப்புக் கல்வி வலயத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ்பேசும் 13 கல்வி வலயங்களைச் சேர்ந்த 800 மாணவர்கள், 52 போட்டிகளில் பங்கு பற்றியதாக கிழக்கு மாகண கல்வித் திணைக்களத்தின் தமிழ் பிரிவுக்குப் பெறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் சிவ நித்தியானந்தா தெரிவித்தார்.

இப்போட்டிகளின் பிரதான நிகழ்வு மட். களுதவளை மகாவித்தியாலயத்திலும், ஏனைய நிகழ்வுகள், மட்.பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம், களுவாஞ்சிகுடி இராசமாணிக்க மண்டபம், மட்.விநாயக வித்தியாலயம், மட்.கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலம், மட்.செட்டிபாளையம் மகாவித்தியாலயம், மட்.தேற்றாத்தீவு மகாவித்தியாலயத்திலும் நடைபெற்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.  

இதன்போது பிரதி கூத்து, நாடகம், எழுத்தாக்கம், விவாதம், போன்ற பல நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்தாகும்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .