2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

பவளக்கொடி வடமோடிக்கூத்து

Kogilavani   / 2014 மே 30 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு, படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள - முனைக்காடு நாகசக்தி கலை மன்றத்தில்; ஏற்பாட்டில்  பவளக்கொடி வடமோடிக் கூத்து சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலய முற்றத்தில் அரங்கேற்றம் செய்யப்படவுள்ளது. 

கூத்து வெறுமனே ஒரு பொழுதுபோக்கு கலையாக மட்டும் அல்லாமல் நாங்கள் பார்க்கத் தவறிய பல்வேறு விடயங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

கூத்து அளிக்கை, அளிக்கையின் படிமுறை, கூத்துப்பிரதி கட்டமைக்கப்பட்டுள்ள விதம், அலங்கரிக்கப்பட்ட களரி, அதில் கட்டப்படும் தோரணம் என்பன அன்றைய கலைஞர்களின் கலையாளுமையின் நுணுக்கத்தினையும், அறிவினையும் புகட்டி நிற்கின்றது.

கூத்தில் பார்வையாளர்கள் தங்களை கட்டுப்படுத்தி நிகழ்வினை பார்க்கவிடாமல் சுதந்திரமாகவும், எளிமையாகவும் தொடர்பு கொள்ளும் ஓர் கலை வடிவமாக காணப்படுகின்றது.

இதில் இருக்கின்ற பல செயற்பாடுகள் மனிதர்களை பல்வேறு திசைக்கு கொண்டு சென்று உளவியல், உடல் ரீதியாக பல மாற்றங்களை செய்கின்றது என்பது உண்மை. இதில் ஈடுபடுகின்ற கலைஞர்கள் கூத்து தொடங்கி அரங்கேற்றம் வரையான காலப்பகுதியில் பல விட்டு கொடுப்புக்களையும், தியாகங்களையும் செய்து அளிக்கை செய்கின்றனர்.

கூத்துக் கலையை செய்கின்ற ஒரு கலைஞர் சமூகத்தில் ஓர் சிறந்த இடத்தில் இருப்பார். அவ்வாறு இக்கூத்துக் கலைக்கு எடுத்துக்காட்டப்படத்தக்க  காத்திரம் உண்டு.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .