2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

கவிதை படைப்பாளியின் உணர்வு சார்ந்தது: எஸ்.சிவலிங்கராஜா

Kogilavani   / 2014 மே 26 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன் 

'கவிதை படைப்பது படைக்கின்ற கவிஞனது உள்ளம் சார்ந்ததும் தன்னுணர்ச்சி சாந்ததுமாகும். கவிதைக்கு மூலதனமாக அமைவது சொற்கள். சொற்களினை எவ்வவாறு கவிஞன் அடுக்கிக்கொள்கின்றானோ அதற்கு ஏற்பவவே கவிதைகள் உருவாகும்' என யாழ்ப்பான பல்கலைக்கழத்தின் ஓய்வுநிலை தமிழ்த்துறை பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா தெரிவித்தார்.

யாழ்பாண தமிழ்ச்சங்கமும் யாழ்பாண பல்கலைக்கழக தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய கவிதைப்பட்டறை யாழ்ப்பாண தமிழ்சங்கத்தின் தலைவரும் வணிக பீடாதிபதியுமான பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் வணிக முகாமைத்துவ பீடத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வளவாளராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே சிவலிங்கராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

'கவிதையொன்றினை வரைவிலக்கணப்படுத்த முடியாது. அது உணர்ச்சிசார்ந்தது. அது படைப்பாளியினது எவ்வுணர்வு சார்ந்தது என்பதினை பொறுத்தது.

கவிதைக்கு உணர்ச்சி பிரதானமாகும். அது பேசுகின்ற விடயத்தினை பொறுத்து உணர்ச்சி வேறுபடுகின்றது. கவி உள்ளத்தில் இருந்து வருகின்றது. கவிதையினை இரசிப்பது எமது முதல் பணியாக இருக்கவேண்டும். இரசிப்பதற்கு முதலில் மொழித்தேர்ச்சி இன்றியமையாததாகும்.

மொழியினை இரசிக்க பழகுதல் வேண்டும். அதனுடாக உள்ளத்தின் உணர்வுகளினை ஆற்றல்களினை வெளிக்கொண்டுவர வேண்டும். எமது கவிதைக்கு நீண்டவரலாறு உண்டு. இன்று தினசரிப் பத்திரிகைகளில் புதுக்கவிதை எனும் பெயரில் கவிதைகள் எழுதப்படுவதும் உண்டு. அவற்றில் பெரும்பாலான கவிதைகள் எமது மனதில் நிற்பதில்லை. மாறாக நல்ல கவிதை என்பது மனதில் நிற்க வேண்டும். நல்ல கவிதைகளினை பாடமாக்குவதில்லை. மாறாக அவை பாடமாகின்றன.

சொற்கள் நடந்தால் கட்டுரை, நடனமாடினால் கவிதை என சிலர் நகைச்சுவையாக குறிப்பிடுவார்கள்.

இதற்கு காரணம் சொற்களின் சேர்மானம் ஆகும். கவிஞர் தான் சொல்வதற்கு விரும்பியதினை ஏதோவொரு வடிவில் சொல்ல நினைக்கின்றான். அவை ஒவ்வொரு வடிவங்களாக வெளிப்படுகின்றன. சொற்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு ஓசை, பொருள், வெளிப்பாட்டு முறை என்பவற்றின மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன.

ஈழத்து கவிஞர்களினைப் பொறுத்தவரையில் மகாகவி சேரன,; ஜெயபாலன், நீலவானன் போன்ற பலர் சிறப்பாக கவிதை படைத்தமையினை காணலாம்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .