2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

கணினிப் பயிற்சி விண்ணப்பம் கோரல்

Kanagaraj   / 2014 மே 24 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்

விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி கணனிப் பயிற்சி மாணவர்களை சோர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்படுகின்றது.

மட்டக்களப்பு பிரதேசத்தில் கடந்த இரு வருடங்களாக வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கும் தாய் மற்றும் தந்தையை இழந்த மாணவர்களுக்குமாக இலவச கணனிப்பயிற்சியினை வழங்கிவருகின்றது. அந்தவகையில் தற்போது புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்படுகின்றது.

NVQ அங்கீகாரம் கிடைக்கப்பட்டதன் கீழ் உள்ள இரண்டு பயிற்சிநெறிகளுக்கும் மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கு எதிர்வரும் 10.06.2014ம் திகதிக்கு முன்னர் பணிப்பாளர், விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி (SWO)பிரதான வீதி, புதுக்குடியிருப்பு, மட்டக்களப்பு என்ற முகவரிக்குக் கிடைக்கக்கூடியதாக விண்ணப்பங்கள்  அனுப்பி; வைக்கப்பட்டல் வேண்டும்.

1.    Infomation Communication and Tehcnology Technician (NVQ – Level 4)

2.    Computer Application Asistant  (NVQ – Level 3)

அத்தோடு கணினி வரையியற் வடிவமைப்பாளர்  (Computer Graphic Designer) பயிற்சி நெறிக்கும் உடனடியான விண்ணப்பம் கோரப்படுகின்றது. இப்பயிற்சிநெறிக்கு அடிப்படை கணினி அறிவு உள்ளவர்கள் மாத்திரம் விண்ணப்பிக்குமாறும் குறைந்த அளவு மாணவர்களையே உள்வாங்க இருப்பதால் தகுதியானவர்கள் மாத்திரமே விண்ணப்பிக்குமாறு  கல்லூரி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியானது கணனியினை அடிப்படையாக கொண்டு காணப்படுவதால் அனைத்து மக்களுக்கும் கணனி அறிவினை பெறுவது கட்டாய தேவையாக உள்ளது. காரணம் தற்போது அனைந்து அலுவலகங்கள,; தொழில் நிலையங்கள், வியாபார நிறுவனங்கள் போன்றவை கணனி மயப்படுத்தப்பட்டுள்ளமையால் எந்த தொழில் செய்வதாயினும் கணனிக் கல்வி அடிப்படை தகைமையாக எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் இந்த விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி எம் பிரதேசத்தின் இளைஞர் யுவதிகளுக்கு இலவச கணனி பயிற்சியினை வழங்கி இலங்கை அரச மூன்றாம் நிலைக்கல்வி தொழில்கல்வி ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற (NVQ ) சான்றிதழை மாணவர்களுக்கு வழங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .