2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

விண்ணப்பம் கோரல்

Kanagaraj   / 2014 மே 17 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பினை தலைமையகமாகக் கொண்டு இயங்கு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் 2014 ஆம் ஆண்டுக்கான தமிழியல் விருதுக்கு விண்ணப்பங்கள் கோரியுள்ளது.

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் ஆண்டுதோறும் ஈழத்திலும் இலங்கையிலும், வாழ்கின்ற ஈழத்து தமிழ் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வண்ணம், தமிழியல் விருது வழங்கி வருகின்றது. அந்த வகையில் இவ்வருடம் 6 வது தடவையாக இவ்விருதினை வழங்குவதற்கு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் செயல் வடிவம் கொண்டுள்ளது.

உயர் தமிழியல் விருது.

இலக்கிய மேம்பாட்டுக்கு உரமாய் உழைத்த மிகச் சிறந்த மூத்த படைப்பாளி ஒருவருக்கு எழுத்தாளர் ஊக்குவிப்பு மைய ஸ்தாபகர் ஓ.கே.பாக்கியநாதன் உயர் தமிழியல் விருது வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளது.
தமிழியல் விருது.

இலக்கிய மேம்பாட்டுக்கு உரமாய் உழைத்த மூத்த படைப்பாளிகள் 5 பேருக்கு வவுனியூர் ஸ்ரீ இராமகிருஷ்ணா கமலநாயகி தமிழியல் விருதுடன் தலா 15,000 ரூபா பணப்பரிசும் வழங்கிக் கௌவிக்கப்படவுள்ளன.

தமிழ்ப் பணியாளர் தமிழியல் விருது

ஈழத்து படைப்பாளி அல்லாத அயல்நாட்டு தமிழ்ப் பணியாளர் ஒருவருக்கு கல்விமான் வ.கனகசிங்கம் தமிழியல் விருதுடன் 25,000 ரூபா பணப்பரிசும் வழங்கிக் கௌவிக்கப்படவுள்ளார்.

இன நல்லுறவு தமிழியல் விருது

இன நல்லுறவுக்காக உழைத்த சிங்கள மொழிப் படைப்பாளர் ஒருவருக்கு வணபிதா சந்திரா அடிகளார் தமிழியல் விருதுடன் 10,000 ரூபா பணப்பரிசும் வழங்கிக் கௌவிக்கப்படவுள்ளார்.

அத்தோடு 2013 ஆம் அண்டு வெளி வந்த சிறந்த 20 சிறந்த  நூல்களுக்கான தமிழியல் விருது
சுவாமி விபுலாநந்த அடிகளார் தமிழியல் விருதுடன் 10,000 ரூபா பணப்பரிசும், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை தமிழியல் விருதுடன் 10,000 ரூபா பணப்பரிசும், புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் தமிழியல் விருதுடன் 10,000 ரூபா பணப்பரிசும், அருட் கலைவாரிதி சு.சண்முகவடிவேல் தமிழியல் விருதுடன் 10,000 ரூபா பணப்பரிசும், நாவலாசிரியை பவளசுந்தரம்மா தமிழியல் விருதுடன் 10,000 ரூபா பணப்பரிசும், கலைஞர் ஓ.கே.கணபதிப்பிள்ளை தமிழியல் விருதுடன் 10,000 ரூபா பணப்பரிசும், ஆலங்கேணி கணபதிப்பிள்ளை-செல்லம்மா தமிழியல் விருதுடன் 10,000 ரூபா பணப்பரிசும், பம்பைமடு நாகலிங்கம்-நல்லம்மா தமிழியல் விருதுடன் 10,000 ரூபா பணப்பரிசும், பதிவாளர் எஸ்.முத்துக்குமாரன் தமிழியல் விருதுடன் 10,000 ரூபா பணப்பரிசும், வித்தியா கீர்த்தி ந.சந்திரகுமார் தமிழியல் விருதுடன் 10,000 ரூபா பணப்பரிசும், வழங்கப்படவுள்ளதுடன்,
தகவம் வ.இராசையா தமிழியல் விருதுடன் 10,000 ரூபா பணப்பரிசும், செந்தமிழ்ச் செல்வர் சு.ஸ்ரீகந்தராஜா தமிழியல் விருதுடன் 10,000 ரூபா பணப்பரிசும்,பம்மைமடு கந்தையா-இரஞ்சிதமலர் தமிழியல் விருதுடன் 10,000 ரூபா பணப்பரிசும், கலைஞர் கல்லாற்றான் மு.கணபதிப்பிள்ளை தமிழியல் விருதுடன் 10,000 ரூபா பணப்பரிசும், துறையூர் வே.நாகேந்திரன் தமிழியல் விருதுடன் 10,000 ரூபா பணப்பரிசும், கவிஞர் எருவில் மூர்த்தி தமிழியல் விருதுடன் 10,000 ரூபா பணப்பரிசும் பெற்றனர்.

சிவநெறிப் பரவலர் சீ.ஏ.இராமஸ்வாமி தமிழியல் விருதுடன் 10,000 ரூபா பணப்பரிசும், கலைஞர் அழ.அழகரெததினம் தமிழியல் விருதுடன் 10,000 ரூபா பணப்பரிசும், வைத்தியாச்சாரி மீராசாஹிபு அஹமது தமிழியல் விருதுடன் 10,000 ரூபா பணப்பரிசும், திருமலை லூர்து அருளானந்தம் தமிழியல் விருதுடன் 10,000 ரூபா பணப்பரிசும், வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளனர்.

ஓவியருக்கான தமிழில் விருது

மிகச் சிறந்த ஓவியர் ஒருவர் ஓவியர் கிக்கோ தமிழியல் விருதுடன் 10,000 ரூபா பணப்பரிசும், வழங்கப்படவுள்ளார்.

மேற்படி விருதுகளுக்காக வேண்டி 2013 ஆம் ஆண்டுக்கான தமிழியல் விருதுக்கான நூல்களைத் தேர்வு செய்ய படைப்பாளிகளிடமிருந்து நூல்கள் எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத்திலும் வெளிநாடுகளிலும் வாழ்கின்ற ஈழத்து தமிழ் படைப்பாளிகளின் நூலுக்கான தமிழியல் விருதுக்காக நூல்களை அனுப்பிவைக்கலாம்.

நாவல், சிறுகதை, கவிதை, குழந்தை இலக்கியம், சிறுவர் இலக்கியம், விடலை இலக்கியம், நாடகம், அறிவியல், அய்வியல், வரலாறு, பழந்தமிழ் இலக்கியம், மொழிபெயர்ப்பு நுட்பம், என பல துறைசார்ந்த நூல்களை தேர்வுக்காக அனுப்பி வைக்கலாம். நூல்களின் 3 பிரதிகள் அனுப்பப்படுதல் வேண்டும்.

முதல்பதிப்பு ஏற்றுக் கொள்ளபடும், நூல்கள் வந்து சேர வேண்டிய கடைசிநாள் எதிர்வரும் 10.06.2014 ஆகும்.

ஒரு படைப்பாளி எத்தனை ஆக்கங்களையும் அனுப்பி வைக்கலாம், நூலுடன், பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி கொண்ட விபரத்தினையும் இத்துடன் இணைத்து அனுப்புதல் வேண்டும். சிறந்த அறிஞர்களைக் கொண்ட நடுவர்குழு விருதுக்குரிய நூல்களையும், விருதாளிகளையும் தேர்வு செய்யும், பணமும் விருதும் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் நிபந்தனைகளுக்கமைவாக வழங்கப்படும். இவைகள் அனைத்தினையும் டாக்டர் ஓ.கே.குணநாதன், மேலாளர், எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், ஓகே.பாக்கியநாதன் அறிஞர்சேலை, 1ஏ, பயணியர் வீதி (50, லேடி மென்னிங் ட்ரைவ்), மட்டக்களப்பு, இலங்கை. என்ற முகவரிக்கும் அனுப்பி வைக்குமாறு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் மேலாளர் டாக்டர் ஓ.கே.குணநாதன், தெரிவித்துள்ளார்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .