2024 நவம்பர் 02, சனிக்கிழமை

முத்தமிழ் கலைவிழா

Kogilavani   / 2014 மே 09 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.ரஞ்ஜன்


கொட்டகலையில் அமைந்துள்ள அரசினர் ஆசிரியர் காலாசலையின் ஆசிரிய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முத்தமிழ் கலை விழா (8)  வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் எம்.சந்திரலேகா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக கலாசாலையின் முன்னாள் அதிபர் எஸ்.ஜெயக்குமார் கலந்துக்கொண்டார்.

எதிர்கால தலைவர்களான மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க, வழிகாட்ட ஆயத்தமாக உள்ள இளம் ஆசிரியர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்த இந்நிகழ்வில் பரதநாட்டியும், கூத்து, குழுப்பாடல், நாட்டிய நாடகம், சமூக நாடகம் என பல கலை கலாசார நிகழ்வுகள் மேடை ஏற்றப்பட்டன.

மலையக சமூகத்தில் காணப்படும் மாணவர்களின் பாதிப்பிற்கு பாடசாலையும்  குடும்பமும் எவ்வாறு காரண கர்த்தாக்களாக அமைகின்றன என்பதை எடுத்து காட்டுவதாக சமூக நாடகம் அமைந்திருந்தது.

மேலும் மலையக சமூகத்தில் இருந்த மறைந்து வரும் கூத்தக் கலை ஆசிரியர்களால் மீண்டும் உயிர் கொடுக்கப்படும் என்ற வகையில் மிக சிறப்பாக மேடையேற்றப்பட்ட அர்ச்சுனன் தபசு கூத்து அனைவரையும் கவர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

எல்லா வகையிலும் சிறப்பாக நெறியாள்கை செய்யப்பட்டதாக இங்கு இடம்பெற்ற நிகழ்வுகள் அமைந்திருந்தமை ஆசிரிய மாணவர்களுக்கு அனைவரினதும் பாராட்டை பெற்றுக் கொடுத்தது.















You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .