2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

'வெளிநாட்டு மாப்புள்ள' பாடல் வெளியீட்டு விழா

A.P.Mathan   / 2014 மே 05 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


இசையமைப்பாளர் ‘ஜே’யின் இசையில் 'நான்' திரைப்படப் புகழ் பாடலாசிரியர் கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ள ‘வெளிநாட்டு மாப்புள்ள’ பாடல் இறுவட்டு வெளியீட்டு விழா எதிர்வரும் 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 3 மணிக்கு பத்தரமுல்லையில் அமைந்துள்ள தமிழ்FM வானொலி கலையகத்தில் நடைபெறவுள்ளது.

இன்றைய காலகட்டத்தின் முக்கியமான கதையாடலை கருவாக கொண்டு உருவெடுத்துள்ள ‘வெளிநாட்டு மாப்புள்ள’ பாடல், வெளிநாட்டு மணமகனை திருமணம் செய்வதனால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை நகைச்சுவையோடு கிராமிய மணத்தோடு பேசுகின்றது.

இலங்கையின் பிரபல கானா பாடகர் நவகம்புர கணேஸ் பாடியுள்ள இப்பாடலுக்கான ஒலிக்கலவையை 'சென்னையில் ஒருநாள்' திரைப்படத்தில் பணிபுரிந்த ஷியு மேற்கொண்டுள்ளார்.

தமிழ்FM மற்றும் இலண்டன் ‘வெற்றி’ வானொலி ஆகியவற்றின் ஊடக அனுசரனையில் நடைபெறும் இந்த பாடல் வெளியீட்டு நிகழ்வு, இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியினால் இலங்கையிலும் இலண்டனிலும் ஒரே நேரத்தில் நிகழவுள்ளன.

தமிழ்FM வானொலியின் பணிப்பாளர் பரணிதரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கையின் பிரபல இசையமைப்பாளர் மோகன்ராஜ் வருகை தருகின்றார். கௌர அதிதிகளாக பிரபல பாடகர் மஹிந்தகுமார், ஒலிபரப்பாளர் 'மனிதநேயன்' இர்ஷாத் ஏ.காதர், இசையமைப்பாளர்களான கருப்பையாபிள்ளை பிரபாகரன், பிருந்தன் ராகவன், டிரோன் பெர்ணான்டோ, செந்தூரன் ஆகியோர் வருகை தருகின்றனர்.

இந்நிகழ்விலே இறுவட்டின் முதல் பிரதியினை நிகழ்வின் விசேட விருந்தினராக கலந்துகொள்ளும் ‘தேசமான்ய’, ‘தேச சக்தி’ டாக்டர் அப்துல்கையும் பெற்றுக்கொள்வார். விழா ஒருங்கிணைப்பினை அறிவிப்பாளர்களான எஸ்.ஜனூஸ், பாலமுரளி ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .