2024 நவம்பர் 02, சனிக்கிழமை

'காமரி முதல் கிராம நிலதாரி வரை' நூல் வெளியீடு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 20 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா
,எம்.சி.அன்சர்
 
சம்மாந்துறைப் பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டின் கீழ், ஓய்வு பெற்ற நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.சலீம் அவர்களினால் தொகுத்து எழுதப்பட்ட 'காமரி முதல் கிராம நிலதாரி வரை' எனும் வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை (19) சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நூலானது சம்மாந்துறையில்     பிறந்து     விதானையாக கடமையாற்றி     மரணித்தவர்களினாலும்,     ஓய்வு பெற்றவர்களினாலும்;, தற்போது கடமையாற்றி வருபவர்களினாலும் ஊருக்கு ஆற்றிய பணிகளை கௌரவிக்கும் வகையில் அவர்களது வரலாற்றினை ஆய்வுக்குட்படுத்தி 220 பக்கங்களைக் கொண்டு அமைந்ததாக காணப்படுகின்றது.

ஓய்வு பெற்ற கிராமசேவை நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.இத்ரீஸ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூல் அறிமுக உரையினை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி றமீஸ் அப்துல்லா நிகழ்தினார்.
 
தொடர்ந்து நூலாசிரியர் எம்.எம்.சலீம் அவர்களினால் பிரதம அதிதியாக கலந்துக்கொண்ட உள்ளுராட்சி மாகாண சபை அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவுக்கு நூலின் பிரதி வழங்கி வைக்கப்பட்டன.

நூலின் முதல் பிரதியினை ஒலிபரப்பாளரும் சமூக சேவையாளருமான மனித நேயன் இர்ஷாட் ஏ.காதருக்கு அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கு வழங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏனைய அதிதிகளுக்கும் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.






   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .