2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

'காமரி முதல் கிராம நிலதாரி வரை' வெளியீட்டுவிழா

Kanagaraj   / 2014 ஏப்ரல் 12 , மு.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா

சம்மாந்துறைப் பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் ஓய்வு பெற்ற நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.சலீமினால்  ; தொகுத்து எழுதப்பட்ட 'காமரி முதல் கிராம நிலதாரி வரை' எனும் வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டுவிழா எதிர்வரும் 2014. ஏப்ரல் 19 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இ;ந்த வரலாற்று ஆய்வு நூல் சம்மாந்துறையில் பிறந்து விதானையாக கடமையாற்றி மரணித்தவர்களினாலும், ஓய்வு பெற்றவர்களினாலும்;, தற்போது கடமையாற்றி வருபவர்களினாலும் ஊருக்கு ஆற்றிய பணிகளை கௌரவிக்கும் வகையில் அவர்களது வரலாற்றினை ஆய்வுக்குட்படுத்தி எழுதப்பட்ட சுமார் 300 பக்கங்களைக் கொண்ட இந்த 'காமரி முதல் கிராம நிலதாரிவரை' எனும் நூல் வெளியிடப்படவுள்ளது.

இந்த விழாவின் பிரதம அதிதியாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா கலந்து கொள்ளவுள்ளார்.

கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளருமான ஏ.எம்.எம்.நௌஷhட் ஆகியோரும்.

விNஷட அதிதிகளாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் டீ அல்வீஸ், மேலதிக மாவட்ட செயலாளர் கே.விமலநாதன், சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், நம்பிக்கையாளர் சபையின் தலைவர் டாக்டர் எம்.வை.எம்.முஸ்தபா, வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்தரைப் பிள்ளையார் ஆலைய தலைவர் ஜீ.இராஜகோபாலபிள்ளை உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X