2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

பாரம்பரிய விவசாய நுண்ணறிவு நூல் வெளியீடு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 11 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரம்பரிய விவசாய நுண்ணறிவினை வாழ்வாதார அபிவிருத்திக்கு பயன்படுத்தும் நோக்கிலான அணுகுமுறை என்ற நூலினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டு வைத்தார்.

கொழும்பு தேசிய நூலக ஆவண காப்பக அரங்கத்தில் இந்நூல் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டது.

துரைசுவாமி குமரன் தங்கராசாவினால் ஆக்கப்பெற்ற இந்நூல் பாரம்பரிய விவசாயத்தை நுண்ணறிவின் மூலமாக துறைசார்ந்தோரது வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்து மேம்படுத்தும் நோக்கில் இந்நூல் அமையப் பெற்றுள்ளது.

நூல் ஆசிரியர் துரைசுவாமி குமரன்தங்கராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் திருமதி ஷானிக்கா ஹிரும்புரேகம, பேராசிரியர் றொகான் ராஜபக்ஷ ஆகியோர் உரையாற்றியதைத் தொடர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தர் நிகழ்த்தினார்.
தொடர்ந்து நூலை நூல் ஆசிரியர் குமரன் தங்கராசா வெளியிட்டு வைக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தர் முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் அமைச்சரின் ஆலோசகர் திருமதி வி.ஜெகராஜசிங்கம், முன்னாள் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க கித்துல்கொட, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.தவராசா, கைத்தொழில் அபிவிருத்தி சபைத் தலைவர் நவாப் ரஜாப்தீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X