2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

'துர்க்காமிர்தம்' இசை இறுவட்டுக்கள் வெளியீடு

Kogilavani   / 2014 ஏப்ரல் 09 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்


வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயம்மீது பாடப்பட்ட 'துர்க்காமிர்தம்' இசை இறுவெட்டுக்கள் வெளியீடு  தேவஸ்தான முன் மண்டபத்தில் தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (8) நடைபெற்றது.

துர்க்கையம்மன் மீது பாடப்பட்ட 'திருபள்ளியெழுச்சி', 'திருவூஞ்சல்', 'துர்க்கா பதிகம்' முதலிய சிறப்புப் பாடல்கள் அடங்கிய இரண்டு இறுவெட்டுக்கள் இதன்போது வெளியிடப்பட்டன.

ஈழத்தின் முன்னணி மூத்த இசைக்கலைஞர் இன்னிசை வேந்தர் பொன்.சுந்தரலிங்கத்தின் குரல் வண்ணத்தில், இசையமைப்பாளர் இசைப்பிரியனின் இசையமைப்பிலும் வெளியான இந்த இறுவட்டுக்களுக்கான வரிகளினை கவிஞர் கதிரேசபிள்ளை, அருட்கவி சி.விநாசித்தம்பிப்புலவர், கவிஞர் கந்தவனம், செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன், கவிஞர் சோ.பத்மநாதன், இராசையா சம்பந்தர், கவிஞர் கு.வீரா உள்ளிட்டவர்கள் எழுதியுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X