2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

'வேள்வித் திருமகன் திருப்பாடுகளின் காட்சி' ஆற்றுகை

Kogilavani   / 2014 ஏப்ரல் 03 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ்.திருமறைக்கலாமன்றம் தயாரித்து வழங்குகின்ற மாபெரும் அரங்க ஆற்றுகையான 'வேள்வித் திருமகன் திருப்பாடுகளின் காட்சி' எதிர்வரும் 10ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரையும் திருமறைக்கலாமன்ற அரங்கில் நடைபெறவுள்ளது.

திருமறைக்கலாமன்ற இயக்குனர் நீ.மரியசேவியர் அடிகளாரின் எழுத்துருவிலும் நெறியாள்கையிலும் முதன்முதலாக கடந்த 2012 ஆம் ஆண்டு மேடையேற்றம் கண்ட வேள்வித் திருமகன் திருப்பாடுகளின் காட்சி மேலும் புதிய மாற்றங்களுடன் இம்முறை இரண்டாவது தடவையாக மேடையேற்றப்படுகின்றது.

நீ.மரியசேவியர் அடிகளாரால் இதுவரை எழுதப்பட்ட திருப்பாடுகளின் காட்சி பிரதிகளில் இருந்து மொழிநடையிலும் பொருள் அளிக்கையிலும் சற்று மாறுபட்டதாக எழுதப்பட்டுள்ள இப்படைப்பு வேள்விக் கருவை மையப்படுத்தியதாக அமைந்துள்ளது.

ஆண்டு தோறும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் திருமறைக்கலாமன்றத்தால் மேடையேற்றப்படும் திருப்பாடுகளின் காட்சியை பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிடுகின்றமையும் இலங்கையிலேயே இடம் பெறுகின்ற மிகப்பெரிய அரங்க ஆற்றுகையாக இது அமைகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X